இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் வெளியான படங்கள் வெறும் திரையரங்குகளில் மட்டுமல்லாமல் ott தளங்களிலும் பார்க்கும் அளவிற்கு மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் முதன்மையான இடத்தில் இருக்கும் Netflix-ல் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்ட ரொமான்டிக் படங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.
லவ் டுடே: பிரதீப் இவானா நடிப்பில் 2022 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படம் ஆக லவ் டுடே வெளிவந்தது. இப்படத்தின் கதை ஆனது தன்னுடைய பெண்ணின் காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் புத்திசாலித்தனமாக யோசித்து காதலிப்பவர்களின் இரண்டு பேருடைய போனை மாத்திக்கொண்டு ஒரு நாள் முழுவதும் நடக்கும் விஷயங்களை பார்த்து பிறகு இதே காதலுடன் இருந்தீர்கள் என்றால் என்னிடம் வந்து சொல்லுங்கள். உங்களுடைய கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன் என்று வித்தியாசமான ஒரு கதை அம்சத்துடன் இப்படம் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
- இப்படம் கிட்டத்தட்ட ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 15 கோடி அளவிற்கு வசூலை அடைந்தது.
- இந்த திரைப்படம் அதே தயாரிப்பாளர்களால் இந்தியில் லவ்யபா (2025) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
தீரா காதல்: ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜீவிதா ஆகியோர் நடிப்பில் காதல் படமாக தீராத காதல் வெளிவந்தது. ஒரு திருமணமான ஆண் தனது முன்னாள் காதலியை ரயில் பயணத்தில் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எப்படி அவர் சமாளித்து திருமண வாழ்வில் இணைகிறார் என்பதை பற்றி சொல்லும் விதமாக இப்படம் காதலை மையமாக வைத்து காட்டப்பட்டிருக்கும்.
நித்தம் ஒரு வானம்: அசோக் செல்வன், ரிது வருமா, அபர்ணா, பாலமுரளி நடிப்பில் நித்தம் ஒரு வானம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. OCD பிரச்சனை இருப்பதால் அர்ஜுன், நெருக்கமானவர்களிடமும் பொதுமக்களிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் விதமாக கதை அமைகிறது. இதனால் காதலுக்கிடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சுவாரசியமான காதல் கதையுடன் நகரும்.
மெஹந்தி சர்க்கஸ்: மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. கொடைக்கானலில் மெக்கானிக் ஜீவா, சர்கஸில் கத்தி எறியும் மெஹந்தியை காதலிக்கிறான். ஆனால் சாதி, சமூக வேறுபாடுகள் காரணமாக அவர்கள் பிரிகிறார்கள். ஜீவா அவளை இழந்தாலும், நினைவுகள் வாழ்நாள் முழுவதும் அவனை துரத்துகின்றன. இந்த படம் காதலும், வலியும், இசையும் கலந்து, சர்கஸ் போலவே அழகானதும் குறுகியதும் என்பதை சொல்லுகிறது.
காதலிக்க நேரமில்லை: ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்த காதல் படம். திருமணம், குடும்பம் விரும்பும் பெண்ணும், பாசம் மட்டும் போதும் என நினைக்கும் ஆணும் சந்திக்கிறார்கள். கனவுகள் மோதினாலும், பயணத்தில் காதலும் உறவின் அர்த்தமும் வெளிப்படுகிறது.

டியர்(dear): ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த வருடம் டியர் காதல் படமாக வெளிவந்தது. மனைவியின் குறட்டை கணவரின் தூக்கத்தை கெடுக்கும் போது புதிதாக திருமணமான தம்பதிகள் எப்படி அவர்கள் சவால்களை எதிர்கொண்டு மனைவி மீது இருந்த காதலால் சமரசமான வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதமாக கதை இருக்கும்.
இறுகப்பற்று: ஸ்ரீராம், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா நடிப்பில் 2023 ஆம் ஆண்டு காதல் திரைப்படமாக அனைத்து திரையரங்களிலும் வெளிவந்தது. மூன்று தம்பதிகளின் உறவுகளை மையமாகக் கொண்டது. கருத்து வேறுபாடுகள், சமூக அழுத்தங்கள் காரணமாக அவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள். கவுன்சலிங் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, உறவுகளை மீண்டும் வலுப்படுத்துகிறார்கள். படம், காதல், பொறுப்பு, புரிதல் ஆகியவை உறவை நிலைநிறுத்தும் என்பதை உருக்கமாகச் சொல்கிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற படம் வெளிவந்தது. திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை சுற்றி கதை நகரும். சித்தார்த், காளி இருவரும் காதலில் விழ, அவர்களின் குற்றங்கள் பிரச்சினை உருவாக்குகின்றன. காவல்துறை பின்தொடர, காதலும் குற்றமும் மோதும் சூழலில் அவர்கள் வாழ்க்கை திருப்பம் ஆகிறது. படம் காதல், நட்பு, திரில்லர் கலந்து சொல்லப்பட்ட கதை.
Netflix தளத்தில் தமிழ் ரொமான்டிக் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் பெரிய வரவேற்பு உள்ளது. உண்மையான காதல், பழைய நினைவுகள், குடும்ப பாசம், சமூக சவால்கள் என பல்வேறு கோணங்களில் சினிமா காதலை வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட 8 படங்களும், Box Office வெற்றியோடு OTT உலகிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவை. அடுத்த முறை Netflix-ஐ திறந்தால், இந்த பட்டியலை மனதில் வைத்து பாருங்கள், உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி கிடைக்கும்.