Actor Dhanush: நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி கொண்டு இருக்கிறார். இவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான பரிமாணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திருடா திருடி திரைப்படத்தில் நடித்த தனுஷுக்கும், அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷுக்குமே பத்தாண்டுகளில் மிகப்பெரிய வித்தியாசம் தெரிந்திருக்கும். சமீபத்தில் தனுஷ் வெவ்வேறு பரிமாணத்தில் நடித்த ஆறு படங்கள் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.
திருச்சிற்றம்பலம்: ஹவுசிங் போர்டு வீட்டில் அப்பா, தாத்தா, சிறு வயதிலிருந்தே தன்னுடன் நட்புடன் பழகும் ஷோபனா, அவருடைய குடும்பம் என எளிமையாக ஆரம்பிக்கப்படும் இந்தப் படம் சுவாரசியமான திரை கதையின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படக்குழுவே யோசிக்காத அளவிற்கு நூறு கோடி வரை வசூலும் செய்தது.
நானே வருவேன்: பல வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து பணியாற்றிய திரைப்படம் நானே வருவேன். இந்த படத்திற்கு மேலும் பிளஸ் ஆக அமைந்தது செல்வராகவன் இதில் நடித்தது தான். கொடி மற்றும் பட்டாசு திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் இந்த படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். படம் முழுக்க சைக்கோ தனமான கேரக்டரில் மிரட்டி இருந்தார்.
வாத்தி: இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆன திரைப்படம் வாத்தி. படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் பழைய மாதிரி கதை என்றாலும் அதை தனுஷுக்கு ஏத்த மாதிரி மாற்றி படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்து இருந்தார்கள். இரண்டு மொழிகளிலுமே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.
தி கிரே மேன்: நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பெருமைப்படுத்திய திரைப்படம் தான் தி கிரே மேன். இந்த படத்தில் லோன் ஓநாய் என்னும் புனைப் பெயரில் வரும் தமிழ் கூலிப்படை ஆளான அவிக் சான் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டில் நல்ல விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்திய நடிகர் ஒருவர் ஹாலிவுட் சென்று நடித்தது ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் தனுஷை பாராட்டியது.
அத்ராங்கி ரெ: ராஞ்சனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் எல் ராய் உடன் தனுஷ் இணைந்து பணியாற்றிய திரைப்படம் அத்ராங்கி ரெ. இந்த படத்தில் தனுஷ் உடன் சாரா அலிகான் மற்றும் அக்சய் குமார் நடித்திருந்தனர். ஹிந்தியில் ரிலீஸ் ஆகி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த படம் இரண்டு மொழிகளிலுமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
கர்ணன்: பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுடன் தனுஷ் இணைந்த திரைப்படம் தான் கர்ணன். இந்த படம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. அசுரனுக்கு பிறகு கர்ணன் படம் தனுஷுக்கு மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் ஆகும்.