ஹீரோக்களை தாண்டி சத்தியராஜ் பெயர் வாங்கிய 5 படங்கள்.. நண்பன் பட வைரஸ் அல்டிமேட்

சில நேரங்களில் கதாநாயகர்களை தாண்டி அந்த படத்தின் ஏதோ ஒரு கேரக்டர் பார்வையாளர்களின் மனதில் நின்று விடும். சத்யராஜ் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் நிறைய நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ணி கொண்டிருக்கிறார். அதிலும் சில கேரக்டர்கள் அந்த படத்தின் ஹீரோவையே மறக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் .

பாகுபலி: பாகுபலியில் சத்யராஜ் ‘கட்டப்பா’ என்னும் கேரக்டரில் நடித்து இருப்பார். வரலாற்று கதையை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் சத்யராஜ் நாட்டிற்கும், நாட்டை ஆளும் சிவகாமி தேவிக்கும் உண்மையாக இருக்கும் ஒரு போர் தளபதி. அதே கட்டப்பா அமரேந்திர பாகுபலியை கொன்று விடுவார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு பதிலாக வந்தது தான் அந்த படத்தின் இரண்டாம் பாகம்.

நண்பன்: விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா மூன்று பேரும் படிக்கும் பொறியியல் கல்லூரியின் முதல்வர் விருமாண்டி சந்தானமாக சத்யராஜ் நடித்திருப்பார். இவரை மாணவர்கள் வைரஸ் என்று அழைப்பார்கள். வாழ்க்கைக்கு படிப்பு மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் வைரஸ் அவர் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தால் மனம் மாறுவார்.

வருத்தத்தப்படாத வாலிபர் சங்கம்: சத்யராஜ் நக்கல் நையாண்டிக்கு பேர் போனவர். சத்யராஜ்-கவுண்டமணி-மணியவண்ணன் காம்போவில் வந்த காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை. அப்பா, போலீஸ், வில்லன் என இரண்டாவது இன்னிங்சில் சத்யராஜை பார்த்து கொண்டிருந்த போது, மீண்டும் அந்த பழைய நக்கல் நையாண்டியுடன் சிவனாண்டியாக இந்த படத்தில் நடித்திருந்தார். சத்யராஜ்-சிவகார்த்திகேயன் கூட்டணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக அமைந்தது.

கடைக்குட்டி சிங்கம்: கார்த்தியின் அப்பாவாக ரணசிங்கம் கேரக்டரில் சத்யராஜ் நடித்திருந்தார். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து குழந்தைகள் பெற்று கொள்ளும் இவர் ஒரு கட்டத்தில் மனைவியின் தங்கையைவே திருமணம் செய்து கொள்வார். அதன்பின்னர் அவர் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்ககளை கொண்ட கதை இது.

நோட்டா: நோட்டா முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதை. இதில் சத்யராஜ் மகேந்திரன் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். அரசியல் தலைவர் ஒருவர் ஒரு சாமியாரின் சொல்லை கேட்டு பிளே பாயாக சுற்றி கொண்டிருக்கும் தன்னுடைய மகனை முதலமைச்சர் ஆக்குகிறார். விருப்பம் இல்லாமல் பதவி ஈர்க்கும் அவருடைய மகன் பின்னர் விளையாடும் அரசியல் விளையாட்டு தான் கதை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →