விஜய் ஆண்டனியை வளர்த்து விட்ட 5 படங்கள்.. அம்மாவுக்காக பிச்சைக்காரனாக மாறிய கோடீஸ்வரன்

Vijay Antony: வித்தியாசமான பாடல்களால் தனக்கென ஒரு கூட்டமே உருவாக்கி இருப்பவர் விஜய் ஆண்டனி. இந்தியாவின் முதல் இசை அமைப்பாளராக 2009 கேன்ஸ் தங்க லயன் அவார்டை”நாக்கு முக்க” பாட்டிற்கு பெற்றவர். இசை அமைப்பாளர் , பின்னணி பாடகர், நடிகர், எடிட்டர், இயக்குனர் போன்ற பல்வேறு துறைகளில் தன் தடங்களை பதித்தவர்நான். இவரை வளர்த்து விட்ட 5 திரைப்படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

நான்: ஜீவா ஷங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக வெளிவந்தது நான். சித்தார்த், ரூபா மஞ்சரி போன்ற நடித்துள்ளனர். உளவியல் பிரச்சனை உடைய ஹீரோ, பின்னர் நரம்பு மண்டல நிபுணராக மாறி சிறு வயதில் நடந்த விபத்தை சஸ்பென்ஸ்வுடன் சொல்லுவது திரைப்படமாகும். முக்கியமாக மனித உளவியல், ரிவெஞ் எடுப்பது போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆகும்.

சலீம்: விமல் குமார் இயக்கத்தில் 2014 இல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த சலீம் விஜய் ஆண்டனிக்கு ஒரு நல்ல வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதில் டாக்டர் சலீமாக எப்படி அரசியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை, பரபரப்புகளும் திருப்பங்களும் அடுக்கடுக்காக கொண்டு விழிப்புடன் எதிர்கொள்ளுவதே இத்திரைப்படத்தின் கதை ஆகும்.

பிச்சைக்காரன்: சசி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு சென்டிமென்டல் மற்றும் சமூக கருத்தையும் கொண்டு வந்தது பிச்சைக்காரன். உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்காக பிச்சை எடுக்கும் மிகப்பெரிய முதலாளியின் பரிதாபமும், வாழ்க்கையின் படத்தை உணர்வதே திரைப்படத்தின் மையக்கருத்தாகும். ரசிகர்களிடம் நல்ல அமோக வரவேற்பு கிடைத்தது, பயங்கரமாக ரீச் ஆனது.

கொலைகாரன்: ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் கூட்டணியில் 2019-ல் வெளியானது கொலைகாரன். இது ஒரு ஆக்சன் திரில்லர் படமாகவும், விஜய் ஆண்டனி கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கும். நல்ல வசூலையும் பெற்று, ரசிகர்கள் பாராட்டையும் பெற்றது.

கோடியில் ஒருவன்: மெட்ரோ திரைப்படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் 2021 இல் வெளிவந்த திரைப்படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜா, பிரபாகர் போன்று நடித்துள்ளனர். ஹீரோ ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக தனது வேலையில் கவனம் செலுத்தி கொண்டு, கிரைம் கரப்ஷன் போன்றவற்றை ஒழிப்பதே படமாகும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →