விஷால் கூடவே இருந்து குழி பறித்த 4 பேர்.. நண்பன் என்று சொல்லியே முதுகில் குத்திய துரோகிகள்

Actor Vishal: தமிழ் திரை உலகில் பரிச்சியமக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஷால். தனது வாழ்க்கையில் ஏராளமான தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்துள்ளார். எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கும் இவர், தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களால் ஏற்பட்ட துரோகத்தை எப்போதும் மறக்க முடியாது என கூறினார். அப்படி என்னதான் நடந்தது யாருடன் நடந்தது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

செல்லமே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு சண்டைக்கோழி, திமிரு ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரை 36 திரைப்படங்கள் தமிழில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் தூள் கிளப்பி உள்ளர். ஆனால் இவர் வாழ்க்கையில் 4 பேருடன் ஏற்பட்ட மனக்கசப்பை எப்போதும் மறக்கவேமாட்டாராம்.

மிஷ்கின்: இயக்குனர் மிஷ்கினும் விஷாலும் அண்ணன் தம்பி போல் மூன்று வருடங்களுக்கு மேலாக பழகி வந்தனர். விஷாலின் கேரியர் டவுன் ஆக இருக்கும்போது துப்பறிவாளன் ஒன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வைத்தவர் மிஷ்கின். துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் திரைக்கதை எழுதுவதற்கு மட்டும் 35 லட்சம் கொடுத்ததாகவும், 32 நாட்களில் ஷூட்டிங்கில் 13 கோடி செலவு செய்ததாகவும் விஷால் தெரிவித்துள்ளார். அதை மிஷ்கின் மறுத்திருக்கிறார், அது மிகவும் வேதனையாக இருந்தாக சொன்னார்.

ரமணா மற்றும் நந்தா: பொதுவாக விஷாலுக்கு சினிமா துறையில் அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விஷாலின் நண்பர்களாக உதயநிதி, ஆர்யா , விஷ்ணு விஷால், ரமணா, நந்தா என பல நடிகர்களை கூறிக் கொண்டே போகலாம். அதில் ரமணா, நந்தா மிக நெருங்கிய நண்பர்கள், லத்தி திரைப்படத்தைக் கூட ராணா புரோடக்சன் தான் தயாரித்தது. இந்த திரைப்படத்திற்கு இருவரும் விஷாலை பண மோசடி செய்துள்ளனர் ,

வரலட்சுமி: பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவரும் விஷாலும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சில ஆண்டு காலம் இருந்ததாகவும், செய்திகள் பரவலாக பரவினர். அவர்கள் இருவருமே நண்பர்கள் என தெளிவாக கூறினார்கள். பிறகு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் சரத்குமார், விஷாலுக்கு இடையே ஏற்பட்ட தகராறும் இவர்களுக்கிடையே பெரிய மோதலை உண்டாக்கியது. பிடித்தவர்களே என்னை காயப்படுத்துகிறார்கள் என்று வருந்தினார்.

அக்கவுண்டன்ட் ரம்யா: விஷால் பிலிம் ஃபேக்ட்ரியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக அக்கவுண்டண்டாக வேலை பார்த்தவர் ரம்யா. ஆறு வருஷமா 45 லட்சம் ரூபாய் வரைக்கும் கையாடல் பண்ணி, மோசடி செய்தாக காவல் துறையில் புகார் அளித்தார். அதை வைத்து ரம்யா சென்னையில் சொந்த வீடு வாங்கி உள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தார் விஷால்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →