விஷால் சொந்த செலவில் சூனியம் வைத்த 10 படங்களில் 5 வெற்றி.. மார்க் ஆண்டனி படத்தை தவறவிட்டது தப்பா போச்சு.!

Vishal Produced Movies: விஷால் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்துடன் மொத்தமாகவே 36 படங்கள் தான் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளார். அப்படி இவரின் தயாரிப்பில் வெளியான சில படங்கள் என்னவென்றும், வெற்றி பெற்றதா இல்லையா என்பதையும் பார்ப்போம்.

முதலில் செல்லமே எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக 2002ல் அறிமுகமானார். பிறகு 2013 இல் விஷால் பிலிம் ஃபேக்டரி தொடங்கினார், அதே ஆண்டு “பாண்டியநாடு” படத்தில் ஹீரோவாக நடித்து இவரின் சொந்த தயாரிப்பில் வெளிவந்தது. அரசியல் பின்னணி உடைய ரவுடி, தனது அண்ணனை கொலை செய்து விட்டான் என்பதற்காக ஹீரோ பழிவாங்குவதே திரைப்படத்தின் கதை. இந்தப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி தரவில்லை என்றாலும் ஏதோ ஓரளவுக்கு சுமாரான வெற்றியை தந்தது. இதற்கு சைமா சிறந்த தயாரிப்பாளர் விருதும் வாங்கினார்.

பிறகு அந்த ஆண்டே “நான் சிகப்பு மனிதன்” எனும் படத்தையும் தயாரித்தார், இதுவும் வெற்றியாகவே அமைந்தது.  2014ல் “பூஜை” படத்தையும் தயாரித்தார். அதுவும் நல்ல கமர்சியல் வெற்றியை கொடுத்தது. பாண்டியராஜின் கூட்டணியில் 2016 இல் வெளியான “கதகளி” படமும் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு போதிய அளவு வரவேற்பு எதுவும் கிடைக்காமல் பிளாப் ஆனது.

2017 இல் “துப்பறிவாளன்” , 2018 இல் “இரும்புத்திரை” போன்ற திரைப்படத்தையும் இவரே இயக்கி உள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் ஹிட்டானது. இரண்டுமே நல்ல ஒரு வசூலை தந்தது. பின்னர் 2022-ல் “வீரமே வாகை சூடும்” என்னும் திரைப்படத்தை முகமது ஸுபைர், ராசிக் அஹமத் முகமது கூட்டணியில் தயாரித்துள்ளார். ஆனால் பிளாப் ஆகி நஷ்டம் ஏற்பட்டது .

தற்போது திரையரங்குகளில் தெறிக்கவிடும் அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற “மார்க் ஆண்டனி” திரைப்படத்தையும் இவர்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே இவரின் தயாரிப்பில் வெளியான நிறைய படங்கள் சரியாக போகாதால், நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனாலேயே இந்த படம்  தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தும்,  நான் தயாரிக்கவில்லை என்று சொல்லி தவற விட்டு விட்டார்.

அதேபோல இந்தத் திரைப்படமும் நஷ்டத்தை சந்தித்து விடுமோ என்ற பயத்திலே, இவர் இந்த படத்தை வேண்டாம் என்று சொல்லி மறுத்துட்டார். பிறகு வினோத் குமார் இந்த படத்தை தயாரித்தார். ஆனால் கடைசியில் பார்த்தால் இந்த திரைப்படம் ஒரு மாபெரும் சக்சஸ் பெற்று, விஷால் படங்களிலே இதுவரை அதிக வசூலை பெற்ற திரைப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →