இந்த 5 படங்களில் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட மஞ்சு வாரியர்.. நடிப்பு அரக்கனை மிஞ்சிய பச்சையம்மாள்

நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமா உலகின் ஜோதிகா என்றே இவரை சொல்லலாம். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சினிமா ப்ரொடியூசர் ஆகவும், கிளாசிக்கல் டான்ஸராகவும் இருக்கிறார். என்றும் இளமையான நாயகி இவர். மேலும் தன்னுடைய சிறப்பான நடிப்பினால் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறார். மஞ்சு வாரியரின் நடிப்பில் இந்த ஐந்து படங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

அசுரன்: மஞ்சு வாரியர் என்ற ஒரு சிறந்த நடிகையை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய படம் இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன். சிவசாமியின் இந்த பச்சையம்மாளை அவ்வளவு சீக்கிரம் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. தென் தமிழகத்தின் ஒரு எளிய மனுஷியை கண்முன் நிறுத்தி இருந்தார் நடிகை மஞ்சு வாரியர். நடிப்பின் அசுரனான தனுசையே தன்னுடைய சிறந்த நடிப்பினால் இந்தப் படத்தில் தூக்கி சாப்பிட்டு விட்டார் மஞ்சு.

லூசிபர்: நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் தான் லூசிபர். இந்த படத்தில் பிரித்வி, மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்திருந்தனர். கல்லூரி படிக்கும் பெண்ணுக்கு தாயாக மஞ்சு வாரியர் பிரியதர்ஷினி என்னும் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார்.

துணிவு: நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத்தின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்த திரைப்படம் தான் துணிவு. இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய படம். பாலிவுட் ஹீரோயின் வித்யா பாலனுக்கு அடுத்து அஜித்துக்கு ஜோடியாக களம் இறங்கியவர் தான் மஞ்சு வாரியர். இவர் இந்தப் படத்திலும் தன்னுடைய கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மரக்கார்: மலையாள சினிமாவில் முக்கியமாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று மரக்கார். இந்தப் படத்தில் மோகன்லால், பிரணவ் மோகன்லால், அர்ஜுன் சர்ஜா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர். வரலாற்று கதையை பிரம்மாண்டமாக காட்டிய திரைப்படம் இது. இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் மோகன்லால் நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நடிகை மஞ்சு வாரியரும் தன்னுடைய திறமையான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

சென்டிமீட்டர்: இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் சென்டிமீட்டர். இந்தப் படத்தில் மஞ்சு வாரியருடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் யோகி பாபு நடித்திருக்கின்றனர். அறிவியலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தனது தந்தையின் கனவை நினைவாக்க போராடும் ஒரு விஞ்ஞானியின் கதை. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் பார்வதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →