தமிழ் சினிமாவில் தல அஜித் படங்களை ரசிகர்கள் எப்போதும் வேற லெவலில் கொண்டாடுவார்கள். இதில் பல வருடங்களாக யாரும் கவனிக்காத ஒரு க்யூட் கனெக்சன் இருக்கிறது. அது என்ன தெரியுமா? அஜித் படங்களும், விநாயகர் சம்பந்தப்பட்ட காட்சிகள்.
தொடர்ச்சியாக பல படங்களில், விநாயகர் சிலைகள், பாடல்கள், கதாபாத்திரங்கள் என சின்ன சின்ன பிணைப்புகள் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவைகளில் சில இங்கே பார்க்கலாம்.
வான்மதி – பிள்ளையார்பட்டி விநாயகர் பாடல்.
அமர்க்களம் – நேரடியாக விநாயகர் பாடல்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் – அஜித் காட்சியிலேயே விநாயகர் சிலை இடம்பெறுகிறது.
கிரீடம் – விநாயகர் சிலையை திருடும் சீன்.
மங்காத்தா – அஜித்தின் கதாபாத்திரம் ‘விநாயக்’.
வீரம் – அஜித் பெயர் ‘விநாயகம்’.
வேதாளம் – கதாபாத்திரமும் விநாயகர், அதே சமயம் ஒரு சூப்பர் விநாயகர் பாடல்
விஸ்வாசம் – “அடிச்சி தூக்கு” பாடல் விநாயகர் காட்சியோடு துவங்குகிறது.
இது எல்லாம் எதிர்பாராத விதமாக தோன்றினாலும், ரசிகர்கள் இதை “அஜித் விநாயகர் பிணைப்பு” என்று வேற லெவலில் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. குறிப்பாக ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும், தல ரசிகர்கள் இந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பகிர்ந்து வைரல் செய்து வருகிறார்கள் .
விநாயகர் என்பது தடைகளை அகற்றுபவர். அதே மாதிரி, அஜித்தின் கதாபாத்திரங்களும் எப்போதும் பெரிய சவால்களை சமாளித்து வெற்றி பெறுவதே கதையின் கோர் பாயிண்ட். அதனால்தான் ரசிகர்கள், “தலைக்கும் விநாயகருக்கும் இருக்கும் பிணைப்பு ஒரு சின்ன சினிமாட்டிக் மிரக்கிள் தான்” என்று கூறி வருகிறார்கள் .