தகாத உறவால் சீரழிந்த நடிகை.. மொத்த சொத்தையும் அழித்த கணவர்

பிரபல பாடகியின் மகளாக தமிழ் சினிமாவில் என்ட்ரியான பழம்பெரும் நடிகை ஒருவர், கிட்டத்தட்ட 30 வருடத்திற்கு மேலாக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து கொடி கட்டி பறந்தவர். ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த அவர், பின்னர் அம்மா ரோல்களில் கனகச்சிதமாக பொருந்தி நடித்து பெரும் புகழை பெற்றார்.

அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சில வருடத்திலேயே அவரை விட்டு பிரிந்தார். அந்த நடிகைக்கும் பிளேபாய் நடிகருக்கும் காதல் இருந்த விஷயம் ஊரறிந்தது தான்.

ஆனால் அந்த நடிகையை விட பிளேபாய் நடிகருக்கு வயசு கம்மி என்பதால் பெற்றோர் அவர்களுடைய காதலை பிரித்து விட்டனர். அவருடன் மட்டுமல்ல சில தகாத உறவுகளால் அந்த நடிகையின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.

எதிர்பார்த்த இல்லற உறவு கிடைக்காமல் நடிகை மிகவும் ஏமாற்றம் அடைந்தார். அத்துடன் அவரது சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட கணவரும் மொத்த சொத்தையும் குடித்தே அழித்துவிட்டார். நடிகையுடன் இருந்த சில வருடத்திலேயே அவரை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிட்டார். 

பின்னாளில் பழம்பெரும் நடிகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிபட்டார். இறந்து போகும் தருவாயில் கொடிகட்டி பறந்த நடிகைக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை. அதோடு நடிகையிடம் பைசா பணத்திற்கு கூட வழி இல்லாமல், வறுமையில் வாடி இறந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →