A. R. Murugadoss:ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன் நான் இப்படி ஆகிட்டேன் என்பதற்கு உதாரணமா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இருக்கிறார் . தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த முருகதாஸ் ஏராளமான மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அப்படி இவரின் இயக்கத்தில் வெளியாகிய, 5 பிளாக் பாஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படத்தை பார்க்கலாம்.
ரமணா: விஜயகாந்த், சிம்ரன் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் ரமணா. இந்த படத்தில் ஆசிரியராக மாணவர்களை லஞ்சத்தை ஒழிப்பதற்காக விஜயகாந்த் ஒரு படையை திரட்டி மரண பயத்தை காட்டுவார். அப்படி லஞ்சத்தை பற்றி அடித்தட்டு மக்கள் வர புரிய வைத்த படம். இந்த படத்தின் இறுதி காட்சியில் விஜயகாந்த் தானாகவே முன்வந்து மரண தண்டனையை ஏற்றுக் கொள்வார்.
கஜினி: சூர்யா, அசின் நடித்த கஜினி ஆக்சன் திரில்லர் மெகா ஹிட் மூவியாகும். இத்திரைப்படத்தில் சூர்யா பிசினஸ் மேனாகவும், தனது காதலியான கல்பனாவை மாபியா கேங் கொன்றவுடன் அவர்களை பழிவாங்குவதே படத்தின் கதை ஆகும். தனது காதலி இறந்த போது ஏற்பட்ட காயத்தினால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மெமரி லாஸ் ஆகிவிடும். ரசிகர்களால் பயங்கரமாக கொண்டாடப்பட்ட திரைப்படம் ஆகும்.
துப்பாக்கி: விஜய், காஜல் அகர்வால் கூட்டணியில் வெளியான மரண மாஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படம் துப்பாக்கி. ராணுவ வீரராக இருக்கும் விஜய் இந்தியாவில், குறிப்பாக மும்பையில் ஊடுருவியுள்ள “ஸ்லீப்பர் செல்ஸ்” அதாவது தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து ஒழிப்பது கதை ஆகும். ராணுவ வீரர்களின் முக்கியத்துவத்தை மற்றும் அவர்கள் செய்யும் தியாகத்தையும் வெளிக்கொண்டு வந்த திரைப்படம் ஆகும்.
தீனா: 2001 இல் அஜித்குமார் நடித்து வெளியான திரைப்படம் தீனா. இதுவும் ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படமாகும். திரைப்படதில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். அஜித்தின் ரவுடிசம் போன்றவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல மாஸ் வரவேற்பை பெற்றது. அடி தூள் கிளப்பி, திரையரங்குகளை தெறிக்கவிட்ட வைத்த திரைப்படம்.
கத்தி: விஜய், சமந்தா நடித்து 2014ல் வெளியாகி பட்டய கிளப்பிய திரைப்படம் கத்தி. இந்த படத்தில் விவசாயிகளின் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வெளிச்சம் போட்டி காட்டிய முக்கிய திரைப்படமாகும். சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களையும் ஆணித்தரமாக சொன்ன இத்திரைப்படம் ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது, திரைப்படத்திற்கு சிறந்த கதாநாயகன் விருது போன்ற பல விருதுகளும் கிடைத்தது.