A subject films released in 2023: இந்த வருடம் திரையரங்கில் வெளியான ஐந்து ஏ சப்ஜெக்ட் படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் முழுக்க முழுக்க வன்முறைகளும் ரத்தக்களறியுமாய் தான் நிறைந்திருந்தது. இந்த படங்களை எல்லாம் பார்க்கும்போது எதற்கு இவ்வளவு கொடூரம், ஜாலியா இருக்க தான் படம் பார்க்க வருகிறோம். அதனால் தான் இவற்றிற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழை வழங்கி, அடல்ட் மட்டுமே பார்க்கும் படி செய்தனர்.
விடுதலை: சூரி முதன் முதலாக சீரியஸ் ஆகவும், ஹீரோவாகவும் நடித்த விடுதலை படம் இந்த வருடம் மார்ச் மாதத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் மலைவாழ் பெண்களை போலீஸ் அணுகும் முறையை ரொம்பவே கொடூரமாக காட்டினர். ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2ம் பக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இன்னும் சில புதிய கதாபாத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ் கெட்டப்பிற்காகவே சூரி மெனக்கெட்டு உடல்நிலை கட்டுமஸ்தாக மாற்றினார். அதுமட்டுமல்ல இதில் டயலாக் டெலிவரி, நடிப்பு, சண்டை காட்சி என டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மிரட்டிவிட்டார்.
இறைவன்: ஜெயம் ரவி நடிப்பில் பல வருடங்களாக ரிலீசுக்கு காத்திருந்த இறைவன் படம் ஒரு வழியாக இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் வெளியானது. பெண்களைக் கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கில்லருக்கும், அவரை பிடிக்க போராடும் போலீசுக்குமான யுத்தம் தான் இறைவன் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.
இந்தப் படத்திற்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டதற்கு காரணம் பெண்களை சித்திரவதை செய்யும் காட்சி கொடூரமாக சித்தரிக்கப்பட்டது. இதில் அவர்களின் அலறல் சத்தம் அதீத ஒலியுடன் ஒலிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுப்பதற்கு காரணம் படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களை கொடூரமாக சித்திரவதை செய்வதற்காக மட்டுமல்ல, படம் என்ற பெயரில் பார்வையாளர்களை டார்ச்சர் செய்ததற்காகவும் தான்.
ஃபைட் கிளப்: ஒரு கேங்ஸ்டர் கதையை வித்தியாசமாக இந்த படத்தில் சொல்ல முயற்சித்துள்ளனர். லோகேஷ் இயக்கும் படங்கள் தான் இப்படி இருக்கும் என்றால், அவரது அசிஸ்டன்ட் டைரக்டர் ஆன அப்பாஸ் ரஹ்மத்தும் வன்முறையை தான் கையில் எடுத்திருக்கிறார். படம் முழுக்க அதிரடியான மிரட்டும் சண்டை காட்சிகளும், வெட்டு குத்து, ரத்தமாகத்தான் இருக்குது. குருதான் அப்படினா சிஷ்யபிள்ளை அவரையே மிஞ்சிட்டார்.
அதுமட்டுமல்ல படம் முழுக்க கஞ்சா புகையும், மது பாட்டில்களும் தாராளமாக புழங்குகிறது. ஒரு கட்டத்தில் எச்சரிக்கையை தருகின்றனர், படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளுக்கு கணக்கு வழக்கே இல்லை. அதனால்தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட்டை வழங்கினார்கள். இந்தப் படத்தோட தயாரிப்பாளரே லோகேஷ் கனகராஜ் தான், அப்படி இருக்கும் போது படத்தின் ஆக்சன் கொஞ்சம் தூக்கலாகவே தானே இருக்கும்.
2023ல் வெளியான ஐந்து ஏ சப்ஜெக்ட் படங்கள்
அனிமல்: இந்த வருட கடைசியில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படத்தை சந்திப் வெங்கா ரெட்டி இயக்கினார். இந்த படத்திற்கு வசூல் தாறுமாறாக குவிந்தாலும், இதில் வன்முறையையும், ஆதிக்கத்தையும் செலுத்தி அச்சுறுத்தக் கூடிய ஆண்மையை ஊக்குவிக்கக் கூடிய படமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல முஸ்லிம்கள் குறித்து ஏற்கனவே திட்டமிட்ட ஒரு கருத்தை இப்படம் பிரதிபலிக்கிறது.
இந்த வருடம் வெளியான அடல்ட் படங்களில் அதிகம் பேசப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதில் தந்தையை கொல்ல முயற்சிப்பது யார் என்று தேடி மிருகம் போல அலையும் ஒரு மகனின் கதையை வன்முறையான ரத்த களரியுடன் சொல்லி இருக்கின்றனர். கண்டிப்பாக இந்த படம் குழந்தைகளுக்கானது அல்ல, நிறைய அடல்ட் கன்டென்ட் இருப்பதற்காகவே இதற்கு ஏ சான்றுதலை கொடுத்திருக்கின்றனர்.
சலார்: கேஜிஎஃப்-க்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் இணைந்து நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான சலார் படத்திற்கும் ஏ சான்றிதழை சென்சார் போர்ட் கொடுத்தது. முழுக்க முழுக்க ஆக்சன் சரவெடியாக வெளியான இந்தப் படத்தில் முக்கால்வாசி காட்சி வெறும் சண்டைக் காட்சிகளே ஆக்கிரமிக்கிறது. எங்கு திரும்பினாலும் ரத்தம், ஆயுதம் என பிரபாஸ் ஆக்ஷனில் பொளந்து கட்டினார்.