4 படங்கள் ரிலீசாகியும் பிரயோஜனம் இல்லை.. வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஆர் ஜே பாலாஜி வாங்கிய மொக்கை

சென்ற வாரம் திரையரங்குகளில் நான்கு தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்தப் படங்கள் ஒன்றோடு ஒன்றாக போட்டி போட்டு வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இந்த நான்கு படங்களும் திரையரங்கில் ரிலீஸ் ஆகியும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படங்கள் அமைந்தது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்: இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இதனால் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களின் உழைப்பை எவ்வாறு சுரண்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும். மலையாளத்தில் பெரிய வரவேற்பு ஏற்படுத்தினாலும் தமிழில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

ரன் பேபி ரன்: திரைக்கு வந்து சில நாட்கள் மட்டுமே ஆன ரன் பேபி ரன் அதிரடி திரில்லர் படமாக வெளிவந்தது. இந்தப் படத்தில் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக ஆர் ஜே பாலாஜி விஜய் டிவியில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரமோஷன் செய்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ஆனாலும் அது எதுவும் எடுபடாமல் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மொக்கை வாங்கியது.

மைக்கேல்: கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான மைக்கேல் திரைப்படம். இந்த படத்தில் சுந்தீப் கிஷன், திவ்யன்ஷா கௌசிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி சரத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் மும்பையை ஆள்வதற்கு ஒரு கேங்ஸ்டர் ஆக ஆசைப்படும் மைக்கேல் ஆக சந்திப் கிஷன் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

பொம்மை நாயகி: யோகி பாபு ஒரு காமெடியனாக மட்டுமல்லாமல் பொம்மை நாயகி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் யோகி பாபு உடன் சுபத்ரா மற்றும் பேபி ஸ்ரீமதி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் டீக்கடையில் வேலை பார்க்கும் யோகி பாபு வேலுவாகவும், இவரின் 9 வயது மகளுக்கு வன்கொடுமை முயற்சி ஏற்பட்டதால் அதற்கு நீதி கேட்டு போராடும் விதமாக படம் அமைந்திருக்கும். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் வணிக ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நான்கு படங்களும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனாலும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமிருந்து விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தோல்வி படங்களாக அமைந்தது. அதிலும் ஆர்.ஜே பாலாஜி படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக ஆர்.ஜே.பாலாஜி படமும் எடுபடவில்லை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →