இசையமைத்து, ஹீரோவாகவும் பட்டைய கிளப்பும் 3 பிரபலங்கள்.. AR ரஹ்மானுக்கு டஃப் கொடுக்கும் ஜாம்பவான்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக நடித்த வரும் டாப் Singers பற்றி பார்ப்போம்.

விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய விஜய் ஆன்டனி, 2012-ம் ஆண்டு நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதில் அவரது இயற்கையான நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பின்னர் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படம் அவரை ஒரு ஹீரோவாக மட்டுமல்ல, ஒரு “மீம்ஸ் ஐகான்” ஆக மாற்றிவிட்டது.

ஜீவி பிரகாஷ்!

இளமையும் இசையையும் இணைத்தவர் ஜி.வி. பிரகாஷ். டார்லிங் (2015) திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், இளைய ரசிகர்கள் மத்தியில் விரைவில் பிரபலம் அடைந்தார். ரொமான்ஸ், காமெடி, ஆட்டிடியூட் என அனைத்திலும் சிறந்த விமர்சனங்களை பெற்றார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி!

கிளப்ல மப்புல பாடலால் ரசிகர்களிடம் விரைவில் பிரபலம் அடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, மீசைய முறுக்கு திரைப்படத்தில் தானே கதையை எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்தவர். இந்த படம் தமிழ் இளைய தலைமுறையின் குரலை வெளிப்படுத்தியது. அதன் பின் அவர் நடித்த நட்பே துணை, அன்பறிவு, சிவகுமரனின் சபதம் போன்ற படங்கள் தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் இசையின் பின்னால் இருந்தவர்கள் இன்று கதையில் ஹீரோவாக நடிப்பது அவர்களுது திறமையை காட்டுகிறது. இசையையும், நடிப்பையும் ஒருங்கிணைத்த இந்த Multi-Talented Heroes நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஆர் ரகுமானுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற பட்டத்தை வென்றவர் ஜிவி பிரகாஷ்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →