இசையை தாண்டி தயாரிப்பிலும் கல்லா கட்டிய இளையராஜாவின் 6 படங்கள்.. சூப்பர் ஹிட் அடித்த சிங்காரவேலன்

Ilayaraja As A Producers: இசைஞானி இளையராஜா, தன்னுடைய இசையில் இன்றைய 2k கிட்ஸ்கள் வரை கொண்டாடும் பல எவர்களின் பாடல்களை கொடுத்து இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக மட்டும் தன்னுடைய சினிமா பயணத்தை வைத்துக் கொள்ளாமல், தயாரிப்பாளராகவும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இளையராஜா தயாரித்த ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

அலைகள் ஓய்வதில்லை: இளையராஜாவின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக இருப்பது அலைகள் ஓய்வதில்லை படத்தின் பாடல்கள் தான். குறிப்பிட்டு சமூகத்தை சேர்ந்த இரண்டு பேரின் காதலை அந்த காலத்தில் தைரியமாக இயக்கியது பாரதிராஜா என்றால் தயாரித்தது இளையராஜா. பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தன் அண்ணன் பாஸ்கர் உடன் இணைந்து இசைஞானி இந்த படத்தை தயாரித்திருந்தார்.

கோழி கூவுது: கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு, சுரேஷ், சில்க் ஸ்மிதா, விஜி நடித்த படம் தான் கோழி கூவுது. இந்த படத்தில் வரும் ஏதோ மோகம் ஏதோ தாகம், பூவே இளைய பூவே போன்ற பாடல்கள் இன்று வரை இசை ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இருக்கிறது. இந்த படத்தை பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் இளையராஜா தன்னுடைய அண்ணன் பாஸ்கர் உடன் இணைந்து தயாரித்திருந்தார்.

ஆனந்த கும்மி: புதுமுக ஹீரோ மற்றும் ஹீரோயினோடு கல்லாப்பெட்டி சிங்காரம், கவுண்டமணி இணைந்து நடித்த படம் தான் ஆனந்த கும்மி. இந்த படம் இளையராஜாவின் மனைவி ஜீவா இளையராஜா பெயரில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது.

கொக்கரக்கோ: 1983 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் கொக்கரக்கோ. இந்த படத்தை கங்கை அமரன் எழுதி இயக்கியிருந்தார். இளையராஜா தன்னுடைய அண்ணன் பாஸ்கர் உடன் இணைந்து பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பின் கீழ் தயாரித்திருந்தார். முழுவதும் புது முகங்களோடு இந்த படம் ரிலீஸ் ஆனது.

ராஜாதி ராஜா: இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் ராஜாதி ராஜா. இந்த படத்தில் மலையாள கரையோரம் கவி பாடும் குருவி, மாமா உன் பொண்ண கொடு போன்ற பாடல்கள் இன்றுவரை பேவரட் லிஸ்டில் இருக்கிறது. ராஜாதி ராஜா படத்தை இளையராஜா தன்னுடைய அண்ணன் பாஸ்கர் உடன் இணைந்து, பாவலர் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.

சிங்கார வேலன்: இயக்குனர் ஆர்பி உதயகுமார் இயக்கத்தில் கமலஹாசன் மற்றும் குஷ்பு நடித்த படம் தான் சிங்காரவேலன். நகைச்சுவை கலந்த காதல் படமாக இது வெளியானது. இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிக்கும் படி இருக்கும். சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தையும் இளையராஜா, பாஸ்கர் உடன் இணைந்து தயாரித்திருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →