கதிர் கலக்கிய தரமான 5 படங்கள்.. திறமை இருந்தும் அங்கீகாரம் கொடுக்காத சினிமா உலகம்

மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். இவர் பல அற்புதமான படங்கள் கொடுத்தாலும் தற்போது வரை தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வருகிறார். அவ்வாறு கதிர் நடிப்பில் அசத்தியும் அங்கீகாரம் கிடைக்காத 5 தரமான படங்கள் எது என்பதை தற்போது பார்க்கலாம்.

மதயானை கூட்டம் : வரட்டு கௌரவம் பிடித்த ஊர் மக்கள் எதற்காகவும் ரத்தம் சிந்தவைக்கவும், சிந்தவும் தயாராக இருக்கும் கதை தான் மதயானை கூட்டம். இதுதான் கதிரின் அறிமுகப்படம் என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு தனது முதல் படத்திலிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து இருந்தார்.

பரியேறும் பெருமாள் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் அற்புதமான படமாக வெளியானது பரியேறும் பெருமாள். படித்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இளைஞனுக்கு நடக்கும் வன்கொடுமைகளை பற்றிய படம் தான் பரியேறும் பெருமாள். இந்த படத்திற்கு ஒரு சரியான கதாநாயகனாக கதிர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

கிருமி : கதிர், ரேஷ்மி மேனன், யோகி பாபு, சார்லி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கிருமி. போலீஸில் நடக்கும் சில அநீதிகளை வெட்ட வெளிச்சமாக்கிய படம் கிருமி. மதயானை கூட்டம் படத்தில் நடித்ததை காட்டிலும் இந்த படத்தில் கதிர் கூடுதலாக ஒரு பங்கு ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

பிகில் : அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர் மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். கால்பந்தாட்ட வீரராக இந்தப் படத்தில் கதிர் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கதிர் தனக்கான ஸ்கோரைப் பெற்றார்.

சூழல் : பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூழல். சிறிய ஊரில் மயான கொள்ளை 9 நாட்களில் நடந்து முடிக்கும் கதை இது. இந்தப் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆக கதிர் நடிப்பில் அசத்திய இருந்தார். இவ்வாறு அற்புதமான படங்கள் கொடுத்தாலும் கதிர் தற்போது வரை அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →