குடிபோதையில் சொத்தை அளித்தாரா கண்ணதாசன்? ஆவேசத்தில் உண்மையை உடைத்த வாரிசு!

கவிப்பேரரசு கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா பற்றியும், குடும்பத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார். அண்ணாதுரை கண்ணதாசனும் தமிழ் படங்கள் ஒரு சிலவற்றில் நடித்துள்ளார்.

கவிப்பேரரசு கண்ணதாசன் மதுப்பழக்கம் உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய பழைய நினைவுகளை பகிர்பவர்கள் அனைவரும் அவருடைய மதுப்பழக்கத்தையும் சேர்த்து தான் சொல்வார்கள். கண்ணதாசன் பாடல் எழுதும் போது மது அருந்தி விட்டு தான் எழுதுவாராம்.

இவர் மதுப்பழக்கத்தினாலேயே அவருடைய சொத்துக்குள் அனைத்தையும் இழந்து விட்டதாகவும், தன் குடும்பத்திற்கு என்று எதையும் சேர்த்து வைக்கவில்லை என்றும், இதனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இப்போது கஷ்ட்டப்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

கண்ணதாசன் பொன்னழகி என்பவரை முதலில் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். மீண்டும் 1951 ஆம் ஆண்டில் பார்வதி என்பவரை திருமணம் செய்து ஏழு குழந்தைகள் பெற்றார். தன்னுடைய ஐம்பதாவது வயதில் வள்ளியம்மையை மணந்தார் இவர்களுக்கு விசாலி என்னும் ஒரு மகள் உள்ளார். அண்ணாதுரை கண்ணதாசன், அவருடைய இரண்டாவது மனைவியின் மகனாவார்.

இதுபற்றி பேசிய அவருடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும், கண்ணதாசனுக்கு ஒரு நாளைக்கு 7500 முதல் 10,000 சம்பளம் என்றும் அதில் அவர் 60 ரூபாய் மட்டுமே மதுவுக்காக செலவிட்டார் என்றும், கண்ணதாசனாலும், அவருடைய மது பழக்கத்தினாலும் எங்கள் குடும்பம் கஷ்டப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

அண்ணாதுரை கண்ணதாசன் சிந்தனை செய், நந்தா நந்திதா, பறவைகள் பலவிதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கண்ணதாசனின் மகள் விஷாலி கண்ணதாசன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கவிதை நெறியாளராகவும் இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →