வித்தியாசமான கதைகளத்துடன் கார்த்திக் சுப்புராஜின் 5 படங்கள்

கார்த்திக் சுப்புராஜ் முதலில் ஒரு ஷார்ட் பிலிம் எடுக்க ஆரம்பித்து பின்பு வெள்ளி திரைக்கு இயக்குனராக வந்தார். அதற்குப் பிறகு தொடர்ந்து ஒரு வித்தியாசமான படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் இவர் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு வெற்றி கிடைத்தது.

பீட்சா: 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படம் ஒரு திரில்லர் படமாகவும், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒருவரின் வாழ்க்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் விதமாக இந்த படம் அமைந்திருந்தது. இவர் இயக்கிய முதல் படத்திலேயே இயக்குனர் என்று பெரிய அந்தஸ்தை பெற்றார்.

ஜிகர்தண்டா: 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருப்பார்கள். இது கேங்ஸ்டர் மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹாக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. இந்தப் படம் வணிக ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இறைவி: 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருப்பார்கள். இது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். முக்கியமாக இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டும் வகையில் இந்த படம் அமைந்தது.

மெர்குரி: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஹாரர் திரில்லர் படமாக அமைந்தது. இதில் பிரபுதேவா, சனந்த் ரெட்டி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படம் மக்களிடத்தில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.

பேட்ட: 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, பாபி சிம்ஹா நடித்திருப்பார்கள். மேலும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது முழுக்க முழுக்க கமர்சியல் படமாக எடுக்கப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →