மல்டி ஸ்டார் ஹீரோக்கள் நடித்தும் தோல்வி ஆன 5 மூவிஸ்.. நான்கு படங்களில் மணிரத்தினம் வாங்கிய மோசமான அடி

Director Mani Ratnam: தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான் தான் இயக்குனர் மணிரத்தினம். இவர் அதிகமாக மல்டிஸ்டார்களை வைத்து படம் எடுத்திருக்கிறார். ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன் டெட் என்பது போல படங்கள் தோல்வியை  சந்தித்தது. அப்படி தோல்வி அடைந்த நான்கு படங்கள் என்ன என்பதையும், அதில் யார் யார் நடித்திருக்கிறார்கள் என்றும் பார்க்கலாம்.

ஆயுத எழுத்து: 2004 இல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆயுத எழுத்து. இதில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், த்ரிஷா கிருஷ்ணன் போன்றோர் நடித்துள்ளனர். இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை சொன்ன படம். இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது தவிர படம் வெற்றி பெறவில்லை

செக்கச் சிவந்த வானம்: 2018 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்தது செக்கச் சிவந்த வானம். திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், அருண், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடித்துள்ளனர். எல்லா நடிகர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இருந்தாலும், கதை ரசிகர்கள் மனதில் நிற்காமல் போனதால் படம் வெற்றி பெறவில்லை.

ராவணன்: 2019 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ராவணன். இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ராமாயணம் கதையினால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டதாகும். தமிழ் மற்றும் இந்தியில் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வியை தான் தழுவியது

இருவர்: 1977 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இருவர். அரசியல் கட்சி தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்கு இடையே இருந்த ஆரம்ப கால நட்பை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. இன்று வரை விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

ரத்த சரித்திரம்: 2010 ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ரத்த சரித்திரம். இது ஆந்திர மாநிலத்தை சார்ந்த பரீட்தல ரவீந்திர என்ற, அரசியல் பின்னணியில் இருந்த நபரின் சுயசரித கதையாகும். இந்த படம் தான் சூர்யாவுக்கு முதல் பாலிவுட் என்ட்ரி ஆகும். இருந்தாலும் இந்த படம் தோல்வியை தான் தழுவியது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →