ரகுவரன் சாவில் மர்மம்.. பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த பப்லு

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்ட பறந்தவர் நடிகர் ரகுவரன். அவர் மறைவு ஒட்டு மொத்த சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

படைத்த சாதனைகள் :

ரகுவரன் தமிழ் சினிமா மட்டுமின்றி கிட்டத்தட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருப்பது இவர் படைத்த சாதனைகளாகும். தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்த துணை கதாபாத்திரம் மற்றும் வில்லன் ரோல்கள் மக்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டது.

அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், முதல்வன், அமர்க்களம், சிவாஜி, யாரடி நீ மோகினி, மற்றும் பீமா போன்ற படங்களில் ரகுவரனின் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தது.

இவர் இறந்ததற்கு தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு காரணமாக கூறிவந்த நிலையில், தற்போது நடிகர் பப்லு ஒரு காரணத்தை முன் வைத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையை உடைத்த பப்லு

ரகுவரனும், நானும் நல்ல நண்பர்கள் நானும் அவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருப்போம் ஆனால் என்னை விட உயரம் மட்டும் அவர் சற்று அதிகமாக இருப்பார்.

ரகுவரன் சில காலமாக போதைக்கு அடிமையாகி இருந்தார். நானும் அவரை திருத்துவதற்கு எவ்வளவோ முயற்சித்து பார்த்தேன். அவர் போதை பொருளுக்கு அடிமையானதால் சில நாட்களிலேயே மூளையில் இருக்கும் நினைவுப் பகுதி செயல் இழந்தது. இதுதான் அவர் இறந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் என்று பப்லு தற்போதைய பேட்டியில் கூறியிருக்கிறார்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →