வாயினால் அழிந்து நாசமான 5 நட்சத்திரங்கள்.. பாலிவுட் தான் முக்கியம் என எல்லாத்தையும் இழந்த அசின்

தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகள் ஒரு சில படங்கள் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பெற்று பெரிய வளர்ச்சியை அடைவார்கள். அவர்கள் தாங்கள் செய்த தவறுகளால் சினிமா வாய்ப்பை இழந்து தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் சில பேர் இருக்கிறார்கள் சில பேர் மறுபடியும் வாய்ப்பு தேடி தமிழ்சினிமாவில் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதில் முக்கியமான ஐந்து பேர்

அசின்: இவர் நல்ல நிலையில் வேகமாக வளர்ச்சி அடைந்து முக்கிய நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றார். பின்னர் அந்த வெற்றியை இந்தி சினிமாவிலும் பெற வேண்டும் என்று முயற்சி எடுத்து சென்றார். ஓரளவிற்கு வெற்றி பெற்றார். அப்போது சல்மான் கான் உடன் கிசுகிசுக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் அப்போது ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பில் தமிழ் நடிகர்கள் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என்று ஒரு ஆணையிட்டார்கள். அதை மீறி கண்டுக்காமல் சென்றார் அங்கு சென்று ராஜபக்ச குடும்பத்துடன் விருந்தில் கலந்து கொண்டார். பின்னர் ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் பெரிதாக இல்லை. தமிழ் சினிமா இவரை ஒதுக்கிவிட்டது வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அமலா பால்: சினிமாவில் நடித்த முதல் திரைப்படம் வெற்றியடையவில்லை பின்னர் தனது கண்களை மற்றும் வசீகரமான அழகை காட்டி நன்றாக நடித்து பெயர் பெற்று நன்றாக வளர்ந்து வந்தார். அந்த சமயத்தில் திருமணத்தை செய்து கொண்டு வாய்ப்புகளை இழந்தார் பின்னர் திருமண வாழ்க்கையும் இழந்தார் இப்பொழுது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வடிவேலு: இவரைப்போல் யாரும் வேகமாக வளர்ச்சி அடைய முடியாது மக்கள் மனதில் இடம் பெற முடியாத அளவிற்கு இருந்து வந்தார். நன்றாக இருக்கும் நேரத்தில் அரசியலுக்குள் நுழைந்து தேவையில்லாத பேச்சுகளை பேசி கடைசியில் அவர் நினைத்தது நடக்காமல் பல வருடங்கள் ஓரங்கட்டப்பட்டார். இப்போது பழைய நிலைக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

அப்பாஸ்: வசீகரமான முகம் அழகான நடிப்பு இவற்றையெல்லாம் வைத்து பல படங்களில் பல பெண்களின் கனவு கண்ணனாக வாழ்ந்துவந்தார். கதை தேர்ந்தெடுக்க தெரியாமல் முக்கியமான படங்கள் அதாவது ஜீன்ஸ் முதற்கொண்டு படங்களை நிராகரித்து பின்னர் என்ன நடிப்பது என்று தெரியாமல் நடித்து இன்று அவர் சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

மோகன்: மைக் மோகன் என்று செல்லமாக தமிழ்சினிமாவில் இவரை அழைத்து வந்தார்கள் இவர் படங்கள் அனைத்தும் வெள்ளிவிழா ஆனால் இவர் ஒரு பெரிய நட்சத்திரமாக வரும் வேளையில் இவருக்கு பின்னணி குரல் கொடுப்பவர் இவரை விட்டு விலகிவிட்டார். பின்னர் சொந்த குரலில் பேசி பட வாய்ப்புகளை இழந்து எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இன்று புதிதாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் தமிழ் சினிமாவில்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →