Puratchi Thalaivar MGR: தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் தான் எம் ஜி ராமச்சந்திரன். இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஏராளம். அந்த காலத்தில் இருந்த ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தன் தனித்துவமான நடிப்பினால் கட்டி ஆண்டவர். அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் மக்களுக்காக பல புதுமையான திட்டங்களையும் கொண்டு வந்தவர்.
நம்ம வீட்டுப் பிள்ளை என அழைக்கக்கூடிய அளவிற்கு மக்களின் உள்ளங்களில் காவிய அரசனாக என்றும் மறக்க முடியாதவர் தான் எம்ஜிஆர். இவர் வாழும் காலங்களில் சுற்றி இருந்த எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தன்னை பாதுகாத்திட, மெய் காப்பாளர்களை கூடவே வைத்திருப்பார். அப்படி இவருடன் இறுதிவரை இருந்த ஐந்து மெய் காப்பாளர்கள் யார் என்று பார்க்கலாம்.
முதலமைச்சர் ஆனபோதும் காவல்துறையினர் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னுடன் கூடவே இருந்து பாதுகாவலர்களாக செயல்பட்ட மெய்க்காப்பாளர்களை கடைசி வரை கூட வைத்திருந்தார். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு காப்பாளர் கேபி ராமகிருஷ்ணன், மேலும் சிலரையும் மெய்க்காப்பாளராக நியமித்திருக்கிறார்.
புரட்சிதலைவரின் நிழலாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு நகமும் சதையுமாக இருந்து செயல்பட்டவர்கள் இவர்கள். தங்களின் உயிரை விட, எம்ஜிஆர் உயிரை காப்பாற்றுவதில் மிகவும் கவனத்தோடு இரவு பகல் பாராமல் செயல்பட்டவர்கள். குறிப்பாக கே பி ராமகிருஷ்ணன், எம் கே ராமலிங்கம், என் சங்கர், நார்தார் சிங், N,சங்கர் போன்ற ஐந்து நபர்களைக் கொண்ட ஸ்டன்ட் குழு எப்போதுமே அவருடனே இருப்பார்கள்.
கே பி ராமகிருஷ்ணன்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் இரட்டை வேட படங்களில், அவருக்கு மாற்றாக மற்றொரு வேடத்திற்கு இவரே டூப் நடிகராக நடிப்பார். 1958 ல் வெளியான நாடோடி மன்னன் படத்தில் இருந்து எம்ஜிஆர் கடைசியாக நடித்த மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரையில் அவருடன் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் போலவே வாள் சண்டை, சிலம்பு சண்டை போன்றவைகளை முறைப்படி கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். பல காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை காண்பித்திருக்கிறார். குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை அன்போடு கொடுத்திருக்கிறார். அவர் பதவி எல்லாம் எதுவும் வேண்டாம் கடைசிவரையில் உங்கள் கூடவே இருந்து செயல்படுகிறேன் அது போதும் எனக்கு என்று கூறியிருக்கிறார்.
N. சங்கர்: சங்கர் இதயக்கனி திரைப்படத்தில் மக்கள் திலகதிற்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்திருக்கிறார். நிறைய படங்களுக்கு அசிஸ்டன்ட் மாஸ்டர் ஆகவும் இருந்தார். காவல்காரன் திரைப்படத்தில் ஷேர் ஃபைட் சீனில் சோலோபைட்டும் செய்திருக்கிறார். எம்ஜிஆர் எது சொல்லி கொடுத்தாலும் உடனடியாக செய்து விடுவார் என்று இவர் பெருமையாக சொல்லுவார்.