மொத்த படக்குழுவையும் முதலாளி ஆக்கி அழகு பார்த்த ரஜினி.. இதுக்கு பெயர்தான் தலைவர்

Super Star Rajini: சினிமாவில் படிப்படியாக முன்னேறி வளர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும் மனதில் வைத்து செயல்பட கூடியவர். இவர் நடித்த பாண்டியன் படத்தில் மொத்த படக்குழுவையும் முதலாளி ஆக்கி அழகு பார்த்த சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது.

1992 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கி, தயாரித்த படம் தான் பாண்டியன். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பாண்டியன்’ என்ற இந்திய காவல் பணி அதிகாரியாக தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டினார். இதில் இவருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இயக்குனரான எஸ்.பி.முத்துராமனை ஒரு தயாரிப்பாளர் ஆகியது ரஜினி தான். முத்துராமன் மட்டும் தயாரிப்பாளராக மாற்றவில்லை, இந்த படத்தில் வேலை செய்த முக்கிய டெக்னீசியர்கள் அனைவரையும் தயாரிப்பாளராக மாற்றி இருந்தார். இதனால் இந்த படத்தில் கிடைத்த லாபத்தை அனைவருக்கும் பிரித்து சரிசமமாக கொடுத்தார் வள்ளல் ரஜினி.

இந்த பணத்தை வைத்து அனைவரும் சொந்த வீடு கட்டினார்கள். ரஜினி செய்த உதவியை இன்று வரை அவர்கள் மறக்காமல் தங்களது வீட்டில் ரஜினி படத்தை வைத்திருக்கின்றனர். ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் வேலை செய்த டெக்னீசியன்ஸ்களுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பரிசு பொருட்களை வழங்குவார்கள்.

பெரும்பாலான படங்களில் தங்க காசுகள், ரொக்கமாக பணம், இருசக்கர வாகனம் போன்றவற்றை பரிசாக வழங்குவார்கள். ஆனால் படத்தில் பணிபுரிந்தவர்களை கொண்டாடும் விதமாக பாண்டியன் படத்தில் ரஜினி அனைவரையும் தயாரிப்பாளர் ஆக்கி அனைவருக்கும் லாபத்தை பிரித்துக் கொடுத்தார்.

இன்று வரை இப்படி ஒரு காரியத்தை எந்த நடிகரும் செய்ததில்லை. இந்த அளவிற்கு ஒரு நடிகர் உதவி செய்தது ரஜினி மட்டுமே, அதனால்தான் இவர் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். அதனால் தான் ரசிகர்களும் இவருடைய படத்தை திருவிழா போலவே திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →