இந்திய சினிமாவில் இதுவரையிலும் ஒரு மாயபிம்பமாக இருக்கும் படங்கள் கே.ஜி.எஃப் மற்றும் பாகுபலி. இந்த படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, படத்தின் பட்ஜெட், கலை வடிவம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன், கதை என அத்தனையும் பிரம்மாண்டமாக பேசப்பட்டு வருகிறது. பாகுபலி திரைப்படம் எல்லாம் ரிலீஸ் ஆகி பல வருடம் ஆனாலும் சினிமா வட்டாரங்களால் பெரிதாக பேசப்படுகிறது.
இந்த படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பெரிதாக பேசப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் இப்போதைய சமூக வலைத்தளங்களின் தாக்கம் அப்போது கிடையாது. இப்போது போல அப்போதெல்லாம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன், முதல் நாள் ரிவியூ, டிவிட்டர் ரிவியூ எல்லாம் கிடையாது.
அப்படி இருந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு திரைப்படம் பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை விட அதிக சாதனைகளை படைத்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படம் தான் அந்த சாதனையை படைத்தது.
படையப்பா படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த கூட்டங்களில் 50 சதவீதம் கூட கே.ஜி.எஃப், பாகுபலிக்கு வரவில்லை என்பது தான் உண்மை. இன்றைய சூழல் போல தியேட்டர் டிக்கெட்டுகள் விலை அப்போது இல்லை. 40, 50 ரூபாய் டிக்கெட்டுகளில் மக்கள் படத்தை பார்த்தார்கள். இதனால் இந்த படத்தின் கலெக்சன் அவ்வளவாக வெளியே தெரியவில்லை. படையப்பா படத்தின் மொத்த வசூல் 40 கோடி.
படையப்பா படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவாஜியின் சம்பளத்திற்கு ரஜினிகாந்த் தொகை எழுதப்படாத செக்கை தான் கொடுத்தாராம். சிவாஜி தான் அதை மறுத்து அவருக்கு தேவையான தொகையை பெற்றுக் கொண்டாராம்.
210 பிரிண்டுகள் மற்றும் 700,000 ஆடியோ கேசட்டுகளுடன் உலகம் முழுவதும் ரிலீசான முதல் தமிழ் திரைப்படம் படையப்பா. அந்த ஆண்டுக்கான 5 மாநில விருதுகளை பெற்றது. இந்த படம் ஜப்பானில் மட்டும் 50,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. இப்போதிருக்கும் சமூக வலைத்தளங்கள் அப்போது இல்லாததால் படையப்பாவின் சாதனை நம்மில் பலருக்கு தெரியவில்லை.