திரும்பத் திரும்ப இந்த 5 வில்லன்களை வைத்து ஒப்பேத்தும் தமிழ் சினிமா.. வாரிசுக்கு பின் சோலி முடிந்த பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமாவில் தற்சமயம் மறுபடி மறுபடியும் அதே வில்லன்களை பார்க்க கூடிய அளவுக்கு இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களில் காப்பி அடித்து ஒப்பேத்துகின்றனர். அப்படி தற்போது கோலிவுட்டை ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கும் டாப் 5 வில்லன்கள் யார் என்பதை பார்ப்போம்.

ஜான் கொக்கன்: ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ஜான் கொக்கன். தற்போது திரையரங்கில் மிரட்டிக் கொண்டிருக்கும் அஜித்தின் துணிவு படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி சமீப காலமாக டாப் ஹீரோக்கள் நடிப்பில் வெளியாகும் படங்களில் ஜான் கொக்கன் முகம் தான் தெரிகிறது.

விஜய் சேதுபதி: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டத்தை உருவாக்கிக் கொண்ட விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்ததன் மூலம் தற்போது டாப் வில்லன்களின் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிவிட்ட விக்ரம் படத்தில் உலக நாயகனுக்கு வில்லனாக தோன்றி மிரள விட்டிருப்பார். இப்படி தொடர்ந்து பல படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக தான் தற்சமயம் கமிட் ஆகி கொண்டு இருக்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்

எஸ் ஜே சூர்யா: இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது வில்லனாக மிரட்டி கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்து வெளியான ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான் போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது திரையரங்கில் மிரட்டி கொண்டிருக்கும் வாரிசு படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராம்சரனின் ஆர் 15 மற்றும் தனுஷ் இயக்கி நடிக்கும் ரயான் படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.

வினய்: முதலில் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர், ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நடிப்பதன் மூலம் தனது செகண்ட் இன்னிசை துவங்கிய வினய் தற்போது கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் வில்லனாக நடித்து வெளியான துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன், டாக்டர் போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் இவருக்கு வில்லனாக நடிப்பதற்காகவே சமீபத்தில் பட வாய்ப்பு குவிந்து கொண்டிருக்கிறது.

Also Read: 5 வருடமா தயாரிப்பாளர் காசை நாசமாக்கிய விஜய் சேதுபதி.. ஹீரோவாக மண்ணைக் கவ்விய 10 படங்கள்

கருடா: பார்ப்பதற்கே மிரட்டும் வகையில் இருக்கும் இவர் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார். இந்த படத்திற்கு முன்பு விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். அதன்பின் அருண் விஜய்யின் நடிப்பில் வெளியான யானை, ஜன கன மன போன்ற படத்திலும்  வில்லனாக மிரட்டி இருப்பார். தற்போது கேஜிஎஃப் 3-ல் தற்போது வில்லனாக பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இந்த 5 நடிகர்கள்தான் தற்சமயம் அடுத்தடுத்த படங்களில் திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய முகமாக இருக்கிறது. இதனால் பழைய வில்லன்களுக்கெல்லாம் மவுசு குறைந்து போனது. அதிலும் பல வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் வாரிசு படத்தில், அவருடைய வில்லத்தனம் ஒர்க் அவுட் ஆகாமல் சோழி முடிந்தது.

Also Read: மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →