Director Atlee : பொதுவாகவே புதிதாக ஒரு படம் வெளியானால் அதுக்கு முன்னதாக வெளியான படங்களில் சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியும் இயக்குனர்கள் முன்பு படங்களை பார்த்துவிட்டு அதன் ஈடுபாட்டின் காரணமாகத் தான் தன்னுடைய படங்களை எடுத்து வருகிறார்கள். அவ்வாறு ஜெராக்ஸ் காப்பி போல் எடுக்கப்பட்ட 5 படங்கள் எது என்பதை இப்போது பார்க்கலாம்.
கேப்டன் மில்லர் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் உருவான இந்த படம் தன்னுடைய புத்தகத்தில் இருந்து திருடப்பட்டதாக நடிகர் மற்றும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி கூறியுள்ளார். அவர் எழுதிய பட்டத்து யானை கதை சாயலில் கேப்டன் மில்லர் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜா ராணி : அட்லீ இயக்குனராக அறிமுகமான படம் தான் ராஜா ராணி. ஆர்யா, நயன்தாரா காம்போவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் சாயலில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் தற்போது வரை அட்லீ என்றாலே காப்பி இயக்குனர் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் : மம்முட்டி, அஜித், தபூ, ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிப்பில் ராஜமோகன் இயக்கத்தில் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் 1995ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிட்டி படத்தின் காப்பி என சர்ச்சை ஆனது.
தெறி : அட்லீ, விஜய் கூட்டணியில் வெளியான தெறி படம் அப்போது வசூலை வாரி குவித்தது. 1990 ஆம் ஆண்டு சுபாஷ் இயக்கத்தில் வெளியான விஜயகாந்தின் சத்ரியன் பட சாயலில் தெறி படம் உள்ளது என விமர்சனங்கள் இருந்தது. அட்லீ படங்களுக்கு இவ்வாறு விமர்சனங்கள் வருவது சகஜம் தான் என சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
மெர்சல் : அட்லீ இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மெர்சல்.சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்து வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தைப் போல் உள்ளது என கிண்டல் செய்யப்பட்டது. ஆனாலும் மெர்சல் படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.