சில திரைப்படங்களுக்கு அதிக ஹைப் கொடுக்கப்பட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டும் பிளாப் ஆகிவிடும். அதே நேரம் சின்ன பட்ஜெட் படங்கள் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய அளவிற்கு வெற்றியடைந்து கோடிக்கணக்கில் வசூலை அள்ளிவிடும். நிறைய லோ பட்ஜெட் திரைப்படங்கள் தான் தேசிய விருது வரை சென்று இருக்கின்றன. அப்படி லோ பட்ஜெட்டில் உருவாகி கோடிகளை அள்ளிய தமிழ் படங்களை கீழே பார்க்கலாம்.
காக்கா முட்டை : காக்கா முட்டை 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இரு சிறுவர்களின் பீட்ஸா சாப்பிடும் ஆசையை எதார்த்தமாக காட்டிய திரைப்படம். ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். 1 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 12 கோடி வசூல் செய்தது.
விசாரணை: சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்னும் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் விசாரணை. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படம் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. சிறந்த படத்திற்கான தேசியவிருது வாங்கியது. ஒன்றரை கோடி பட்ஜெட் கொண்ட இந்த திரைப்படம் 13 கோடி வசூல் செய்தது.
டிமான்டி காலணி: இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் டிமான்டி காலணி. இந்த படம் ஒரு திகில் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு அறையில் நடக்கும் திகில் காட்சி தான் மொத்த திரைப்படமே. 2 கோடி பட்ஜெட்டை கொண்ட இந்த திரைப்படம் 10 கோடி வசூல் செய்தது.
எல் கே ஜி: லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எல் கே ஜி. இந்த திரைப்படத்தில் RJ பாலாஜி முதன்முதலில் ஹீரோவாக நடித்தார். சமகால அரசியல் சூழ்நிலையை கிண்டலாகவும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் எடுக்கப்பட்ட திரைப்படம். மூன்றரை கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 20 கோடி வரை வசூல் செய்தது.
அருவி: இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இந்த படத்தில் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை எதார்த்தமாக கூறியிருந்த படம் இது. 1 கோடி பட்ஜெட் கொண்ட இந்த படம் 9 கோடி வசூல் செய்தது.