வளர முடியாமல் தவிக்கும் 5 காமெடி நடிகர்கள்.. சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் புகழ்

தமிழ் திரையுலகில் தற்போது புதுப்புது நடிகர்களின் வரவு அதிகமாக இருக்கிறது. அதிலும் காமெடி ரோல்களில் பல நடிகர்கள் கலக்கி கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஒரு சிலரை தவிர பல காமெடி நடிகர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி வளர முடியாமல் தவிக்கும் ஐந்து காமெடி நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

ஷா ரா: இருட்டு அறையில் முரட்டு குத்து, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான ஓ 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தற்போது இவர் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.

sha-ra
sha-ra

புகழ்: விஜய் டிவியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் தற்போது பெரிய திரையில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இவர் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு முன்னணி காமெடி நடிகராக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்கான வாய்ப்புக்காக இவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

ரமேஷ் திலக்: இவர் சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், டிமான்டி காலனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவருக்கு தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லை.

பிராங்ஸ்டர் ராகுல்: யூட்யூபராக இருக்கும் இவர் முருங்கைக்காய் சிப்ஸ், சிவகாமியின் சபதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் இவருக்கு தற்போது வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் யூடியூப் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

prankster-rahul
prankster-rahul

வி ஜே ரக்சன்: விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளராக இருக்கும் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து வாய்ப்புகளுக்காக காத்திருந்த இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →