சூர்யா தூக்கி எறிந்த 3 இயக்குனர்கள்.. வளர்த்த கிடா மார்பில் முட்டிய சோகம்

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் சூர்யா ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களை தற்போது ஒதுக்கி வைத்துள்ளார்.

சூர்யா மீண்டும் அந்த இயக்குனர்களின் படத்தில் நடிப்பதே சந்தேகம் தான். ஆனால் இந்த இயக்குனர்கள் தான் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களை கொடுத்துள்ளார்கள். ஆனாலும் அந்த இயக்குனர்களுடன் மீண்டும் சூர்யா பணியாற்ற தயக்கம் காட்டுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.

கௌதம் வாசுதேவ் மேனன் : சூர்யாவுக்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தந்தவர் கௌதம் மேனன். இப்போது சூர்யா மீண்டும் கௌதம் மேனனுடன் படங்களில் பணியாற்ற தயக்கம் காட்டி வருகிறார். இதற்கான காரணம் என்னவென்றால் கௌதம் மேனன் முழு ஸ்கிப்டையும் முதலிலேயே தர மாட்டார். படப்பிடிப்பு நடத்தும் போது தான் அவருடைய கற்பனைக்கு ஏற்றவாறு கதையை எழுதுவார். அதனால் சூர்யா இப்போது இவருக்கு கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார்.

ஹரி : ஆறு, வேலு போன்ற சூப்பர் ஹிட் படங்களை ஹரி சூர்யாவுக்கு கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய சிங்கம் படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இப்போது ஹரி சொல்லும் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லையாம்.

பாலா : முதலில் ஒரு ஹீரோவாகவே ரசிகர்களால் அங்கீகரிக்கப்படாமல் இருந்த சூர்யாவை நந்தா படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றிருந்தார் பாலா. அதேபோல் சகோதரர்கள் போல தான் சூர்யா மற்றும் பாலா இருவரும் நீண்ட காலமாக பழகி வந்தார்கள். சூர்யா, பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக சூர்யா தயாரித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இடையே சண்டை ஏற்பட்டதால் இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. மேலும் வளர்த்த கிடா மார்பில் முட்டியது போல சூர்யா பாலாவை தூக்கி எறிந்து விட்டார் என சர்ச்சையும் எழுந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →