யாருக்கும் தெரியாத 5 முக்கிய நடிகர்களின் இன்னொரு முகம்..

ஒரு சில சினிமா கலைஞர்களை பொறுத்தவரை நடிப்பில் சிறந்து விளங்குவதோடு ஒரு சில தனி திறமைகளையும் கொண்டிருப்பார்கள். பாடகர்களாகவும், பாடலாசிரியராகவும், இயக்குனர்களாகவும் தங்களுடைய பன்முக திறமையை காட்டுவார்கள். அதே போல ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களா இந்த படத்திற்கு குரல் கொடுத்தார்கள் என்று ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு சிலர் பின்னணி பேசியிருக்கின்றனர்.

நிழல்கள் ரவி: நிழல்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ரவி. இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. இவர் நடிகர்கள் ரகுமான், ராஜா, நானா படேகர், அமிதாப் பச்சன், மிதுன் சக்கரபோர்த்தி போன்றோருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

சின்மயி: சின்மயி ஒரு சிறந்த பாடகி மட்டுமில்லாமல் சமூக ஆர்வலரும் கூட. பின்னணி பாடகி, சின்னத்திரை தொகுப்பாளராக மட்டுமில்லாமல் நிறைய ஹீரோயின்களுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். பூமிகா, சமந்தா, தமன்னா, திரிஷா, சமீரா ரெட்டி, ஏமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியிருக்கிறார்.

கனிகா: பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் கனிகா. வரலாறு திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிக்கவில்லை என்றாலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய சினிமா பாதையில் பயணித்து கொண்டு தான் இருக்கிறார். இவர் நடிகைகள் ஜெனிலியா, சதா, ஷ்ரேயா போன்றோருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

ராதிகா: நடிப்பில் கை தேர்ந்த நடிகையான ராதிகா, தொகுப்பாளினி மற்றும் தயாரிப்பாளர் என்பதை தாண்டி பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். முதல் மரியாதை படத்தில் ராதாவுக்கு குரல் கொடுத்தவர் இவர் தான். மேலும் தன்னுடைய தங்கை நிரோஷாவுக்கு செந்தூர பூவே, இணைந்த கைகள் போன்ற படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

சுஹாசினி: தேசிய விருது நடிகையான சுஹாசினியை டப்பிங் ஆர்டிஸ்ட்டாக மாற்றியவர் அவருடைய கணவர் மணிரத்னம் தான். மணிரத்னத்தின் கதாநாயகிகளில் பலருக்கு குரல் கொடுத்தவர் சுஹாசினி தான். தளபதியில் ஷோபனாவுக்கு குரல் கொடுத்த இவர் திருடா திருடா, இருவர், உயிரே, மின்சார கனவு போன்ற படங்களில் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →