டாப் நட்சத்திரங்களின் பெயர்களை மொத்தமாய் டேமேஜ் பண்ணும் வாரிசுகள்.. மகனுக்காக மன்னிப்பு கேட்ட மக்கள் செல்வன்!

Suriya Sethupathi: தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற துறைகளிலும் கோலோச்சி நிற்கும் சில பிரபலங்களின் பிள்ளைகள் அவர்கள் அளவுக்கு வளர்வது இல்லை.

வெற்றி என்பதை அவர்கள் அளவுக்கு பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தாய் – தகப்பன் சேர்த்து வைத்த பெயரை கெடுக்காமல் இருந்தாலே போதும் என இப்போது சொல்லும் அளவுக்கு சில வாரிசுகள் நடந்து கொள்கிறார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திரங்களின் வாரிசுகள் செய்த சேட்டையை பார்க்கலாம்.

சூர்யா சேதுபதி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகனுக்காக மன்னிப்பு கேட்டதிலிருந்து அவர் எந்த அளவுக்கு நொந்து போய் இருக்கிறார் என தெரிகிறது.

சூர்யா சேதுபதியின் ஆட்டிடியுடுக்கு அவருடைய வயது ஒரு காரணம் என்று சொல்லலாம். பக்குவப்படாத வயதில் கேமரா வெளிச்சத்தில் நிற்பது தான் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் தன்னை ஒரு நல்ல இயக்குனராக காட்டுவதற்கு எவ்வளவோ போராடி வருகிறார்.

கடைசியில் அவர் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினியின் நடிக்க வைத்தது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் படத்தின் தோல்வி காணாமல் போன வீடியோ தான் காரணம் என அவர் கொடுத்த பேட்டி பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது.

அதிதி ஷங்கர்: மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த பெண் தன்னை சுட்டித் தனமாக காட்டிக் கொள்வதாக எண்ணி க்ரிஞ் வேலைகள் செய்வது சுத்தமாய் சகிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் பாட்டு பாடி ஒட்டுமொத்த இணையதளமும் ஷங்கரை ரோல் செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்டார்.

சக்தி வாசு: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார்களை இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் வாசு. அவருடைய மகனும் சினிமாவில் ஹீரோவாக பெரிய அளவில் முயற்சி செய்து அது அவருக்கு கை கொடுக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு சக்தி அதிகம் மது குடித்துவிட்டு காரை கூட ஓட்ட முடியாமல் பொதுமக்கள் நடுவே போதையில் தள்ளாடியது பெரிய அளவில் தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →