தளபதி அம்மாவுடன் சேர்ந்து பாடி ஹிட்டடித்த பாடல்கள்.. ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ ஓவர்தான் இருக்கு

விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஜய் அறிமுகமானார். அதன்பின் தனது தந்தையின் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்த விஜய், தனது தாய் ஷோபா சந்திரசேகருடன் சேர்ந்து பல திரைப்படங்களில் பாடியும் உள்ளார். அப்படிப்பட்ட திரைப்படங்களின் தொகுப்பைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

ரசிகன் : 1994ஆம் ஆண்டு வெளியான ரசிகன் திரைப்படத்தில் நடிகர் விஜய், சங்கவி உள்ளிட்டோர் நடித்து இருப்பர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருப்பார். வாலியின் வரிகளில் இடம்பெற்ற லவ் லவ் மாமா என்ற பாடலை எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் சேர்ந்து விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஒன்றாக இணைந்து பாடியிருப்பார்.

விஷ்ணு : 1995 ஆம் ஆண்டு வெளியான விஷ்ணு திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜய், சங்கவி ஜோடி இணைந்து நடித்திருப்பார். எஸ்.ஏ. சந்திரசேகர், தேவாவின் கூட்டணியில் இடம்பெற்ற இத்திரைப்படத்தில், தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா என்ற வாலியின் வரிகளில் உருவான பாடலை அம்மா ஷோபாவும் மகன் விஜயும் இணைந்து பாடிய முதல் பாடலாகும்.

ஒன்ஸ்மோர் : எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் வைரமுத்துவின் வரியில் இடம்பெற்ற ஊர்மிளா என்ற பாடலையும் விஜய்யும், விஜயின் தாயாரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பாடியிருப்பார்.

சிவகாசி : விஜய், அசின் உள்ளிட்டோர் நடிப்பில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான சிவகாசி திரைப்படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலை விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும், பாடகர் திப்புவும் பாடியிருப்பர். இந்த பாடலில் நயன்தாரா போட்ட குத்தாட்டத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியாது. மேலும் இந்த பாடலை ஷோபா சந்திரசேகரா பாடினார் என்று கேட்கும் அளவிற்கு அவரது குரல் அமைந்திருக்கும்.

வேட்டைக்காரன் : விஜய், அனுஷ்கா நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற என் உச்சி மண்டையில என்ற பாடலை ஷோபா சந்திரசேகர் பாடியிருப்பார். அவருடன் சேர்ந்து பாடகர்கள் சாருலதா மணி, சக்திஸ்ரீ கோபாலன், கிருஷ்ணா ஐயர் உள்ளிட்டோரும் பாடியிருப்பார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →