5 வருடமா தயாரிப்பாளர் காசை நாசமாக்கிய விஜய் சேதுபதி.. ஹீரோவாக மண்ணைக் கவ்விய 10 படங்கள்

ஒரு காலத்தில் விஜய் சேதுபதி படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது. அவர் நடிப்பில் கடந்த ஐந்து வருடங்களாக வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வியை பெற்றது. இதனால் தயாரிப்பாளர்களும் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் கிட்டத்தட்ட பத்து படங்கள் வரை அவருக்கு தோல்வியை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியை சறுக்கி விட்ட அந்த தோல்வி திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்: விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. விஜய் சேதுபதி ஏன் இப்படி ஒரு கதையில் நடித்திருக்கிறார் என்று பலருக்கும் இப்படம் ஏமாற்றத்தை கொடுத்தது.

ஜூங்கா: கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் போட்ட பணத்தில் பாதியை கூட வசூலிக்கவில்லை.

சீதக்காதி: பாலாஜி தரணிதரன் இயக்கிய இப்படம் விஜய் சேதுபதியின் 25 ஆவது திரைப்படம் ஆகும். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

சிந்துபாத்: கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருப்பார். ஆனால் இந்த திரைப்படமும் அவருக்கு தோல்வி திரைப்படமாக அமைந்தது.

சங்கத்தமிழன்: விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு நேர்மாறாக இப்படம் ரிலீஸ் ஆகி படுதோல்வி அடைந்தது.

லாபம்: எஸ்பி ஜெகநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படத்தின் கதையும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ இப்பதான் சரியாக போகவில்லை.

துக்ளக் தர்பார்: விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் என பெரும் நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் நடித்திருந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் தோல்வியை தழுவியது.

அனபெல் சேதுபதி: விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் திரில்லர் படமாக வெளிவந்த இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியானது. ஆனால் பெரிய அளவில் படம் ரசிகர்களை கவராமல் தோல்வியடைந்தது.

மாமனிதன்: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். நல்ல தரமான கதையாக இருந்தும் கூட இப்படம் தோல்வியை தழுவியது.

டிஎஸ்பி: பொன்ராம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த திரைப்படமும் விஜய் சேதுபதிக்கு பெரும் தோல்வியை கொடுத்துள்ளது. இப்படி ஹீரோவாக தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் விஜய் சேதுபதி இனிமேலாவது தனக்கான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →