Vijay sung a song for other heroes: சினிமாவில் உள்ள ஹீரோக்கள் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அவர்களுடைய திறமையை பல வழிகளில் பயன்படுத்தி வருவார்கள். அந்த வகையில் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், பின்னணி பாடல்களைப் பாடியும் அந்த பாடலை ட்ரெண்டாக்கி விடுவார்கள். இதில் விஜய் அவருடைய படங்களுக்கு மட்டுமில்லாமல் சக நடிகர்களுக்கும் பாடல்களை பாடி கொடுத்திருக்கிறார்.
அப்படி விஜய் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதுவும் அவர் வளர்ந்து வரும் நேரத்தில் முதன் முதலாக பாட ஆரம்பித்தது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ரசிகன் படத்தில் “பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி”. இந்த பாடல் மூலம் ரசிகர்களை காந்த குரலால் ஈர்த்திருப்பார்.
அதன் பின் தொடர்ந்து இவர் நடித்த பல படங்களுக்கு பாடிய இவர் முதன் முதலாக நண்பர்களுக்காகவும் பாட ஆரம்பித்தார். அதில் 1998 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த துள்ளி திரிந்த காலம் படத்தில் “டக் டக் டக் கால்கள் போடும் தாளம்” இந்த பாடலை பாடி கொடுத்திருப்பார். இந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து உன்னிகிருஷ்ணனும் பாடி இருப்பார்.
அடுத்ததாக விக்னேஷ் நடிப்பில் வெளிவந்த வேலை என்கிற படத்தில் ” காலத்துக்கு ஏத்த ஒரு கானா” என்ற பாடலை நாசர் மற்றும் பிரேம்ஜியுடன் சேர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையில் பாடி கொடுத்திருப்பார். அடுத்ததாக சூர்யாவிற்கு கைகொடுக்கும் விதமாக அவருக்கு அமைந்த படம் தான் பெரியண்ணா. இதில் முதலில் விஜய் தான் நடிப்பதற்கு கமிட்டாய் இருந்தார்.
ஆனால் அந்த நேரத்தில் அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இவருடைய நண்பராக சூர்யாவிற்கு இந்த வாய்ப்பை கொடுத்துவிட்டார். அத்துடன் ஒரு பாடலில் விஜய் பாடி கொடுத்து ரசிகர்களே வசீகரக் குரலால் கவர்ந்து இழுத்து இருப்பார். அதுதான் ” நான் தம்மடிக்கிற ஸ்டைலை பார்த்து” என்ற பாடல் அந்த காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் பறக்கும் அளவிற்கு ஒலித்தது. இப்படி விஜய் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல்களின் லிஸ்டில் ஒன்றாக இடம் பிடித்து விட்டது.