ஸ்ரீகாந்த் ஹிட் அடித்து 5 படங்கள்.. கடைசியில் சாக்லேட் பாய்க்கு வந்த சோதனை

Srikanth : 1999-இல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “ஜன்னல் மரபுக் கதவு” என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த ஸ்ரீகாந்த் பின்பு நடிகராக வேண்டும் என்று பயிற்சி செய்து வந்தார். இதற்கு முக்கியமாக வெற்றிமாறன் மற்றும் மிஸ்கின் உதவி இருக்கின்றனர்.

தவறவிட்ட படங்கள்

12b திரைப்படத்தில் முதலில் ஹீரோ வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு தான் வந்தது. ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அதற்குப் பிறகுதான் அந்த திரைப்படத்தில் நடிகர் சியாம் ஹீரோவாக களமிறங்கினார்.

அதேபோல் 2002ல் காதல் வைரஸ் என்ற திரைப்படமும் ஸ்ரீகாந்துக்கு கைகூடியது. ஆனால் அந்தப் படத்தையும் தவறவிட்டார் ஸ்ரீகாந்த்.

வெற்றியை கண்ட ஸ்ரீகாந்த்

2002-இல் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை பூமிகா இணைந்து வெளிவந்த திரைப்படம் “ரோஜா கூட்டம்”. இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். படம் பயங்கர ஹிட்டை கொடுத்தது. முதல் படமே ஹிட்! இதனால் அவர் சிறந்த “Roja Kootam Srikanth” என செல்லமாக அழைக்கப்பட்டார்.

தொடர் வெற்றி பயணம்

ரோஜா கூட்டம் படத்தை தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மனசெல்லாம், பம்பரக் கண்ணாலே போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கடைசில இந்த சாக்லேட் பாய் தேவையில்லாத கெட்ட பழக்கங்களால் போலீசார் கைது செய்துள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →