சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அடுத்தடுத்து நானே வருவேன், கருங்காப்பியம், காப்பி வித் காதல், டக்கர் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் பொம்மை நாயகி, பூமர் அங்கிள் படங்களில் யோகி கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கூர்க்கா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளம் கண்டவர் யோகிபாபு. அதன் பின்னர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கொண்டிருந்தார் யோகி. வீரம், அரண்மனை, மான் கராத்தே திரைப்படங்களுக்கு பிறகு யோகி பாபுக்கு ஒரு நல்ல மார்க்கெட் வந்து விட்டது.

யோகி பாபுவின் மார்க்கெட்டுக்கு சந்தானமும் ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். கவுண்டமணி, வடிவேலுக்கு பிறகு கோலிவுட்டின் காமெடி உலகிற்கு முடிசூடா மன்னனாக இருந்தவர் சந்தானம். டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். சந்தானம் ஹீரோவாக மாற முடிவெடுத்த பின்பு தான் சூரி, சதிஷ், யோகி பாபு போன்றவர்களுக்கு மார்க்கெட் கிடைத்தது.

2015 ஆம் ஆண்டு ‘இனிமேல் இப்படித்தான்’ படத்தின் மூலம் ஹீரோ ஆனார் சந்தானம். இந்த படத்தை அவரே தயாரித்தார். அதன் பின்பு முழு நேர ஹீரோவான சந்தானத்திற்கு எந்த படங்களும் சரியாக அமையவில்லை என்றாலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், A1 படங்கள் ஹிட் அடித்தது.

ஆனால் சந்தானம் இந்த ஹிட் படம் கொடுத்த இயக்குனர்கள் இருவருக்குமே அடுத்த வாய்ப்பு கொடுக்காமல் தட்டிக் கழித்து வந்தார். இதனால் டென்ஷனான இயக்குனர்கள் இருவருமே சந்தானத்திற்கு பதிலாகக யோகி பாபுவை வைத்து படம் பண்ண போகிறார்கள்.

வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட யோகி பாபு இந்த இரண்டு இயக்குநர்களுடனும் படம் பண்ண ஒகே சொல்லிவிட்டார். இவர்கள் இருவருக்கும் ஹிட் படங்களை கொடுத்து அவர் கண்ட்ரோலில் வைத்துக்கொள்வதே யோகிபாபுவின் இப்போதைய மாஸ்டர் பிளான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →