முகேஷ் அம்பானிக்கே டப் கொடுக்கும்.. பகத் பாசிலின் கார் கலெக்ஷன் இதோ 

திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நடிகர் பகத் பாசில் சமீபத்தில் தனது ஆடம்பரமான கார் கலெக்ஷனில் புதியதாக பெராரி காரை சேர்த்துள்ளார். இந்த கார் சாதாரண கார் அல்ல, அதன் விலை கேட்டால் அனைவருக்கும்  வியப்பை தரும் வகையில் உள்ளது.

ஏற்கனவே பகத் பாசிலின் கேரேஜில் லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ் G63 AMG, ரேன்ஞ் ரோவர் ஆட்டோபயோகிராபி LWB, லேண்ட்ரோவர் டிபன்டர் 90 , போர்சே 911, டொயோட்டா வெல்பேர், மினிகண்ட்ரிமேன், வோக்ஸ்வேகன் போன்ற பல ஆடம்பர கார்கள் உள்ளன. கார்களுக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்ற புகழ் அவருக்கு உள்ளது.

இப்போது அவர் வாங்கியுள்ள புதிய பெராரி கார் விலை ₹13.75 கோடி. இது சாதாரணமாக ரூ.1 கோடி அல்லது ரூ.2 கோடி விலையிலான கார் அல்ல. முகேஷ் அம்பானி மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோரிடம் உள்ள அதே மாடல் காரை தற்போது பகத் பாசிலும் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திரை உலகில் பல மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி) பிரபலமாக இருக்கும் பகத்பாசில், தனது யதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளார். அதேசமயம், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் தவறுவதில்லை. கார் கலெக்ஷனில் புதிய சேர்க்கையாக வந்துள்ள இந்த பெராரி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கார் கலெக்ஷனில் புதிய சேர்க்கையாக வந்துள்ள இந்த பெராரி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், “பகத் பாசில் எப்போதும் நடிப்பில் யதார்த்தம் காட்டுவார், ஆனால் லைஃப் ஸ்டைலில் ஆடம்பரத்தை விரும்புகிறார்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 அது மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள், நடிகை நஸ்ரியாவை மணந்த அவர், குடும்பத்தோடு வாழ்ந்தாலும் தனது கனவுகளை நிறைவேற்றும் விதத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறார் என்றும்  “பெராரி வாங்கியுள்ள பகத் பாசில் அடுத்த நிலை லக்சுரி உலகில் நுழைந்து விட்டார்” என்றும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.