கைதி 2 வில் பிரபல ஹீரோ.. லோகேஷ் செய்யும் சம்பவம்

Lokesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அடுத்ததாக லோகேஷ் கையில் எடுக்கும் படம் தான் கார்த்தியின் கைதி 2.

இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இது லோக்கேஷின் எல்சியுவில் இருந்து தான் உருவாகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் டில்லியின் குரல் மட்டும் ஒலித்தது.

மேலும் ரோலக்ஸ் சம்பவம் செய்திருந்தார்‌. அதேபோல் டில்லி மற்றும் ரோலக்ஸ் இருவரும் கைதி 2 படத்தில் மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த சூழலில் கைதி 2 படத்தில் விக்ரம் அதாவது கமலஹாசன் இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது.

கைதி 2 வில் இணைந்த பிரபல ஹீரோ

ஆகையால் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் கைதி 2 படத்தில் இருக்க உள்ளது. இப்போது கார்த்தி சர்தார் 2 மற்றும் சில படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த படங்களை முடித்த கையோடு லோகேஷ் உடன் கைகோர்க்க இருக்கிறார்.

மேலும் லோகேஷும் இப்போது கைதி 2 படத்திற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். கமல் இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் என தொடர்ந்து சருக்களை சந்தித்து வருகிறார். கைதி 2 அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் லோகேஷ் கைதி 2 படத்தை முடித்த கையோடு அமீர் கானை வைத்து ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். இது சூர்யாவின் இரும்புகை மாயாவி படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கினால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →