நெகட்டிவ் ரோலில் நடித்த 5 தரமான வில்லன்கள்.. பிக் பாஸ்க்கு போயிட்டு வில்லனாக மாறிய மொட்டை நடிகர்

கடந்த வருடம் வெளிவந்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் ஆனதற்கு ஹீரோகளுக்கு இணையாக வில்லன்கள் நடிப்பை காட்டியது ஒரு காரணம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தரமான வில்லன்கள் நெகட்டிவ் ரோலில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார்கள். அப்படிப்பட்ட ஐந்து வில்லன்களை பற்றி பார்க்கலாம்.

ஆரவ்: கடந்த வருடம் நவம்பர் மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் உதயநிதி , நிதி அகர்வால், கலையரசன் மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த படம். இதில் ஆரவ் வில்லத்தனமான நடிப்பை காட்டி பிரமிக்க வைத்திருப்பார். இவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் விமர்சித்து வருகிறார்கள்.

லால்: கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், மதுசூதன ராவ் மற்றும் லால் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் காவல்துறையில் பயிற்சி தொடர்பான நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இதில் லால் என்பவர் மிகவும் கண்டிப்பான மற்றும் இரக்கமற்ற பயிற்சியாளராக இருப்பதால் பயிற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு இடையூறு செய்யும் விதமாக நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். ஆனால் இவருடைய இந்த கேரக்டரை மிகவும் கச்சிதமாக செய்திருப்பார்.

வத்சன் சக்கரவர்த்தி: கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி மற்றும் வத்சன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தின் கதை ஆனது ஒரு ஊரையே ஆளக்கூடிய ஒருவர், அவர் செய்யும் அட்டகாசத்தை எதிர்த்துப் போராடும் விதமாக அமைந்திருக்கும். இதில் வத்சன் சக்கரவர்த்தி வில்லனாக நடித்திருப்பார். இவர் நடிப்பை பார்த்த மக்கள் பெஸ்ட் வில்லன் என்று சொல்லும் அளவிற்கு வில்லத்தனமாக நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி: கடந்த வருடம் ஜூன் மாதம் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதற்கு முழு தகுதியும் உடையவர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு தரமான வில்லத்தனத்தை நடித்துக் காட்டி இருப்பார். பெரிய ஹீரோக்கள் வில்லனாக நடித்தாலும் அவருடைய திறமையான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பெறலாம் என்பதை காட்டிய வில்லன்.

சுரேஷ் சக்கரவர்த்தி: கடந்த வருடம் மே மாதம் அருண் ராஜா காமராஜர் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளிவந்தது. இதில் உதயநிதி, ஆரி, தன்யா, ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படம் இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்புக்கு எதிராக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி தாக்குதலை தொடங்குவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்பெக்டர் சுந்தரமாக நடித்திருப்பார். இதில் இவருடைய கேரக்டர் கூடவே இருந்து குழிப்பறிக்கிற மாதிரியான வில்லத்தனத்தை காட்டி இருப்பார். இவர் பிக் பாஸ் இல் பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தியா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இவர் நடிப்பை கொடுத்திருப்பார்.

இவர்கள் அனைவரும் கடந்த வருடம் வெளிவந்த படங்களில் ஒரு வில்லத்தனமான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தாலும் இந்த வருடம் இவர்களுக்கு போட்டியாக இன்னும் அதிகமான வில்லன் கேரக்டர்கள் வர இருக்கிறார்கள். அவர்களும் இவர்களைப் போல நெகட்டிவ் ரோலில் நடித்து வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.