Padai Thalaivan Glimpse Video: கேப்டன் விஜயகாந்த் இன்று தன்னுடைய 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜயகாந்த் தனது வாரிசுகளை சினிமாவில் பெரிய நடிகராக வளர்த்து விட ஆசைப்பட்டார். விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் சில படங்களில் நடித்திருந்தார்.
அதாவது சகாப்தம், மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்த நிலையில் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இப்போது இன்று விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு சண்முக பாண்டியனின் படை தலைவன் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது. யு அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் முனீஸ் காந்த், யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இன்று வெளியாகி இருக்கும் கிளிம்ஸ் வீடியோவை பார்க்கும் போது ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக படை தலைவன் அமைந்திருக்கிறது என்று தெரிகிறது.
படையோட வலிமை தலைவன் கொடுக்கிற நம்பிக்கையில தான் இருக்கு என்ற அதிரடி வசனங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதுவரை சண்முக பாண்டியன் படங்கள் ரசிகர்களின் கவனம் இருக்கவில்லை என்றாலும் இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இதன் மூலம் சினிமாவில் கேப்டன் வாரிசாக கண்டிப்பாக சண்முக பாண்டியன் கால் பதிப்பார் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. மேலும் படை தலைவன் பற்றிய மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.