கோட்டா, படைத்தலைவனா.. AI மூலம் கேப்டனை கண்முன்னே கொண்டு வந்தது யார்.?

Vijayakanth : இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பலரையும் பிரமிக்க வைக்கிறது. இறந்தவர்களை மீண்டும் உயிர்பெற்று பார்க்கும்படி திரையில் காண்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் கோட் மற்றும் படைத்தலைவன் ஆகிய படங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்திருந்தனர்.

விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் இளமையான தோற்றத்தில் விஜயகாந்த் காண்பிக்கப்பட்டிருந்தார். இதற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரிடம் முறையான அனுமதியை படக்குழு வாங்கி இருந்தது.

மேலும் இப்படத்தில் விஜயகாந்தின் குரலை நடிகர் மணிகண்டன் மூலம் பிரதிபலிப்பு செய்ய வைத்திருந்தார். அதேபோல் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் படம் வெளியாகி இருந்தது. இது விஜயகாந்தின் மகன் என்பதால் அவருடைய மரபுடன் தொடர்புடையதாக இருந்தது.

விஜயகாந்தை சரியாக பயன்படுத்தியது கோட்டா, படைத்தலைவனா

அதோடு படத்திற்கு விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பம் படைத்தலைவன் படத்திற்கு தேவையாக அமைந்தது. ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தையும் கொடுத்திருந்தது. ஆனால் கோட் படத்தில் கதையுடன் தொடர்பு இல்லாமல் தான் விஜயகாந்தின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆகையால் கோட் படத்தை விட படைத்தலைவன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வணிகர் ரீதியாக கோட் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 300 கோடிக்கு மேல் சாதனை படைத்தது. ஆனால் தொழில்நுட்பம் வாயிலாக விஜய்காந்தை சரியாக படைத்தலைவன் படம் தான் பயன்படுத்தி இருக்கிறது.

அதுவும் குறிப்பாக விஜயகாந்த் மற்றும் அவரது மகனின் இணைப்பு ரசிகர்களை உணர்ச்சி பூர்வமான தருணத்தை கொடுத்து இருந்தது. அவரின் நினைவுகளை உயிர்ப்பித்த கொடுத்திருந்தது. ஆகையால் படைத்தலைவன் படம் தான் விஜயகாந்தை கண்முன் கொண்டு வந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →