எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரின் கொட்டம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. தனது மகன் தர்ஷனை மிரட்டி அடிபணிய வைத்து கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தர்ஷனுக்கு ஆதரவாக இருந்த ஜனனி டீம்மையும் அவரை வைத்தே விரட்டி விடுகிறார் குணசேகரன்.
ஜனனி டீம் ஜீவானந்தத்தின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அவர்களை வேட்டையாட போலீஸ் டீம் துரத்தி வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடி வருகிறார் ஜீவானந்தம். இதற்கிடையில் பார்கவி, ஈஸ்வரி என அனைவரையும் முடித்து விடுவேன் என குணசேகரன் மிரட்டி தர்ஷனை கைக்குள் வைத்திருக்கிறார்.
ஏற்கனவே கரிகாலனின் நண்பன் மொபைல் போன் ஹேக்கர், ஈஸ்வரியின் ஃபோனில் குணசேகரன் அவரை தாக்கிய வீடியோவை ரகசியமாய் தன்வசம் வைத்துக் கொண்டு பிளாக் மெயில் செய்ய திட்டம் போட்டுள்ளார். அவரும் கல்யாண வீட்டுக்குள் பலே திட்டத்தோடு வருகிறார்.
அந்த வீடியோவை வைத்து குணசேகரனை மிரட்ட திட்டம் போட்டுத்தான் உள்ளே புகுந்துள்ளார். ஆனால் அவரைப் பார்த்தவுடன் ஜனனி டீமுக்கு பொறி தட்டி விட்டது. ஹேக்கருக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க கூடும் என நந்தினி சந்தேகத்தை கிளப்பி விடுகிறார்.
இன்று அந்த ஹேக்கரை சுற்றி வளைக்கப் போகிறார்கள். அவர் போனிலும் அந்த வீடியோ இருக்கிறது. இதனால் குணசேகரனுக்கு எதிரான ஆதாரம் கூடிய விரைவில் வெளிவரப் போகிறது. இதை வைத்து தான் அவர்கள் தர்ஷன் கல்யாணத்தை நிறுத்த போகிறார்கள்.
இன்று சக்தியை வைத்து அந்த ஹேக்கரை கண்காணிக்கிறார்கள். ஒரு பக்கம் மருத்துவமனையில் இருந்து ஜனனி டீமுக்கு போன் வருகிறது, ஈஸ்வரி ஆபத்தில் இருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று. இப்படி குணசேகரன் பல திட்டம் போட்டு காய் நகர்த்துகிறார்