மாசம் 60 கோடி சம்பளமா.? பிரபலத்திற்கு வாரி வழங்கிய சேனல்

Television Highest Salary : வெள்ளித்திரையில் ஒரு படத்திற்கு மொத்தமாக எவ்வளவு சம்பளம் என்று பேசப்படுகிறது. ஆனால் சின்னத்திரை நடிகர்கள் என்றால் ஒரு எபிசோடுக்கு என்று கொடுக்கிறார்கள். அவ்வாறு பிரபலம் ஒருவருக்கு மாதம் 60 கோடி சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட நூறு நாட்களைக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல் தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு மொத்தமாக 130 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது 100 நாட்களுக்கு 130 கோடி சம்பளம். கடந்த முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில் அவருக்கு மொத்தமாக 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம்

கடந்த சீசனில் சல்மான் கானின் சம்பளம் 250 கோடியாகும். இதனால் மாதத்திற்கு கிட்டத்தட்ட 60 கோடியை தாண்டி சல்மான் கானின் சம்பளம் இருந்திருக்கிறது. இது தவிர படம், விளம்பரங்கள் என அதன் மூலமும் சல்மான் கான் வருவாயை ஈட்டி வருகிறார்.

தற்போது சல்மான் கான் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 160 கோடி சம்பளம் பெற்று வருகிறார். மேலும் சல்மான் கான் 15 வருடங்களுக்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுவும் திறம்பட இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்.

முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்த மொழிகளிலும் இந்நிகழ்ச்சியை கொண்டு வந்துள்ளனர். இப்போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →