ஒரு instagram போஸ்ட்க்கு இத்தனை கோடியா? மெஸ்ஸியை முந்திய டாப் பிளேயர்

Instagram : பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது என்பது சுலபமான வழியாகவே உள்ளது. கடின உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து திறமையை பயன்படுத்தி அதை வெளிக்காட்டி பணத்தை ஈட்டலாம் என சமூக வலைத்தளங்கள் வருமானத்தை அள்ளித்தருகின்றன. இந்த வகையில் சமூக வலைத்தளங்களில் படங்களை பதிவிட்டு, வீடியோக்களை பதிவிட்டு சுலபமாக பணம் சம்பாதித்து விடுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது என்பது சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தேடி தருவதாக கருதி கொள்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில் இது உண்மையும் கூட. அவ்வாறு ஒரே ஒரு போஸ்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

அந்த வகையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, விராட் கோலி ஆகிய விளையாட்டு வீரர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ் போட்டு கோடிக்கணக்கில் பணத்தை ஈட்டி உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இதில் யார் யார் எந்த இடத்தை பிடித்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

விராட் கோலி : இவரைப் பற்றி தெரியாதவர்களை பார்க்க முடியாது.இவர் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார். இவர் நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார், நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார். மிக பிரபலமான கிரிக்கெட் வீரரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் இவருக்கு 12 கோடியை பெற்றுத் தந்துள்ளது.

லியோனல் மெஸ்ஸி : லியோனல் மெஸ்ஸி அவர்களும் மிகப்பெரிய பிரபலமான கால்பந்து வீரர். இவர் அர்ஜென்டினா நாட்டினை சேர்ந்தவர். தற்போது மேஜர் லீக் சாக்கர் கிளப் இன்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடுகிறார். எட்டு முறை பாலன் டி’ஓர் விருது வென்றுள்ளார். ஆறு முறை ஐரோப்பிய தங்க காலணி வென்றுள்ளார், 2022 FIFA உலகக் கோப்பையை வென்றுள்ளார். இது போல் பல சாதனைகளை படைத்த சாதனையாளர். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவட்டுள்ள ஒரு போஸ்ட் இவருக்கு 22 கோடியை பெற்றுத் தந்துள்ளது.

மெஸ்ஸியை முந்திய டாப் பிளேயர்..

கிறிஸ்டியானோ ரொனால்டோ : இவரைப் பற்றி தெரியாத நபர்களே இருக்க முடியாது. இவர் ஒரு போர்ச்சுகீசிய கால்பந்து வீரர். தனது 18 வயதிலேயே கால்பந்து போட்டியில் அறிமுகம் ஆகி இன்று வரை தனக்கான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்றே கூறலாம். இவர் தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் இவருக்கு 27 கோடியை பெற்று தந்துள்ளது. இந்த வரிசையில் மெஸ்ஸியை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இவ்வாறு இவர்கள் மூன்று பேரும் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று தந்துள்ளது. இது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவரிடத்தில் வியக்கத்தக்க செய்தியாக பரவி வருகிறது மற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →