அது வேற இது வேற, இருந்தாலும் அப்செட்டில் ரஜினி.. தக்லைஃப் ப்ரோமோஷனால் வந்த கேடு

PAN இந்தியா படமாக தக்லைஃப் நான்கு மொழிகளில் கர்நாடகவை தவிர அனைத்து இடங்களிலும் ரிலீசானது. 5 நாட்களில் இதுவரை இந்த படம் 27 கோடிகள் வசூலித்துள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் மக்களிடையே வரவேற்பு பெறவில்லை. பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

இன்னொரு பக்கம் இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் பிரமோஷன் டீம். எல்லா பக்கமும் இறங்கி அடித்து படம் அப்படி இப்படி என பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டார்கள். இதனால் பார்க்க சென்ற ஆடியன்ஸுக்கு மொத்தமாய் ஏமாற்றமே மிஞ்சியது.

கேரளாவில் ஜோ ஜூ ஜார்ஜிக்கு கட்டவுட் வைத்லெல்லாம் கொண்டாடினார்கள். அங்கே ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ஜார்ஜ் படம் மட்டுமே பெருசாக இருந்தது. மாறாக கமல், சிம்பு, திரிஷா படங்கள் சிறியதாகவும் இருந்துள்ளது. இப்படி தர லோக்கலாக இறங்கி எல்லா பக்கமும் பிரமோஷன்களை தெறிக்க விட்டார்கள்.

இப்பொழுது இதுதான் ரஜினியின் கூலி படத்துக்கு சிக்கலாக மாறியுள்ளது. மணிரத்னம் கமல் போன்ற பிரம்மாண்ட கூட்டணி படமே தோல்வி அடைந்ததை ஒட்டி, ரஜினி படத்தின் வியாபாரம் டல்லாகிவிட்டது. ஆந்திரா, கேரளா பக்கம் சன் பிக்சர்ஸ், கூலி படத்திற்கு தியேட்டரிக்கள் ரைட்ஸ் 50 கோடியில் நிர்ணயித்திருந்தது.

தக்லைஃப் பட ரிலீசுக்கு பின் ஏற்பட்டுள்ள இந்த அடியால் கூலி படத்தை பேரம் பேசி வருகிறார்கள். அவ்வளவு கொடுக்க முடியாது 30 கோடிகள் தான் முடியும் என மல்லு கட்டுகிறார்கள். தக்லைஃப் பட ப்ரொமோஷனை நம்பி ஏமாந்தமைக்குத்தான், இப்படி ஒரு நிலைமை கூலி படத்திற்கு வந்துள்ளது. சினிமாக்காரர்கள் அவர்களுக்கு சாதகமாய் ஏதாவது நடந்து விட்டால் அதை வைத்து மற்ற படங்களை பல்பிடித்து பார்ப்பார்கள்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →