கமல் முரண்டு பிடிப்பதால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாது..  கடைசி படத்திலும் நிம்மதி இல்ல

Thuglife ரிலீஸ் ஆக வேண்டுமென்றால் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறது கர்நாடகா உயர்நீதிமன்றம். தமிழில் இருந்து தான் கர்நாடகம் பிறந்தது என்று கூறிய சர்ச்சையான பேச்சே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் வெடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கமலுக்கு X-தளத்தில் ஜாதி, மதம், கட்சி தரப்பிலிருந்து பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. மொழி பிரச்சனையை வைத்து அரசியல் செய்வது சரியல்ல, இது எந்த விதத்திலும் மக்களுக்கு எந்த ஒரு பயனையும் தரப்போவதில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயகன் படத்தை பெங்களூரை சேர்ந்த KVN புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு வேளை கர்நாடகாவில் Thuglife ரிலீஸ் செய்யப்படவில்லை என்றால் KVN தயாரிப்பில் ஜனவரியில் வெளிவர உள்ள ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கமலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய்-யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்படி ஒரு செய்தி தலையில் இடியே இறக்கி உள்ளது. படப்பிடிப்பு முடிந்த உடனே இப்படி ஒரு பிரச்சனையா? ஏற்கனவே லியோ Scam என்று ஒரு தேவையில்லாத பிரச்சனையை விஜய்-யை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இப்போது புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்பார்த்து Thuglife பட குழு இருப்பதால் விரைவில் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் பரபரப்பாக டிக்கெட் புக்கிங் நடந்து கொண்டிருக்கிறது, 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேலான டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் புக் செய்துள்ளனர்.

கமலஹாசன், STR, மணிரத்தினம் காம்போ திரையரங்கை தெறிக்க விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த படத்திற்கு பின்பும் மணிரத்தினம்-STR Combo-வில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →