பூசணிக்காய் உடைக்கும் விஜய்.. பிள்ளையார் சுழி போட்ட சஞ்சய்

Vijay : விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பா போல் ஹீரோவாக வருவார் என்ற எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக தனது கனவு பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அவரது முதல் படத்தையே பிரம்மாண்ட நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது.

மேலும் ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் சந்திப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் இயக்குனராக சஞ்சய் இடம்பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அப்பா விஜய் 8 பாய்ந்தால் மகன் சஞ்சய் 16 அடி பாய்வார் போல என்று பலரும் கூறி வருகிறார்கள்.

ஆரம்பமாகும் ஜேசன் சஞ்சய்யின் சினிமா பயணம்

மேலும் சஞ்சய்யின் தொடக்கம் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மகள் சினிமாவுக்கு பிள்ளையார் சுழி போடும் போது அப்பா விஜய் பூசணிக்காய் உடைக்க உள்ளார். அதாவது விஜய் அரசியலில் முழு வீச்சாக செயல்பட இருக்கிறார்.

அதற்காக தனது சினிமா பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார். இப்போது ஹெச் வினோத் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படமாக இருக்கப் போகிறது.

அரசியலில் ஜெயித்தாலும், தோற்றாலும் இனி சினிமாவுக்கு வரப் போவதில்லை என்ற முடிவில் விஜய் இருக்கிறாராம்‌. விஜய்யின் வெற்றிடத்தை ஒரு இயக்குனராக சஞ்சய் நிரப்புவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →