சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

Jigarthanda DoubleX – Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்  ஆன படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படம் 1975ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.  எஸ்ஜே சூர்யா லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறார்.

அந்த படம் எப்படி உருவாகிறது, இந்த படம் எடுக்கும் போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை ஆக்சன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில்  ரவுடியான பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் ஒரு படம் எடுத்தார்.

அதேபோன்றுதான் இரண்டாம் பாகத்தில் முரட்டு ரவுடியாக இருக்கும் லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுப்பது போல் திரை கதையை அமைத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் லாரன்ஸ் சொல்லும் டயலாக் அல்டிமேட் ஆக இருக்கிறது.

‘கருப்பா இருந்தா கேவலமா’, ‘தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ’, ‘நல்லவங்கள பத்தி படம் எடுத்தால் யாரும் பார்க்கிறதில்லை’ , ‘சுயசரிதையை கொஞ்சம் மாத்தி எழுதிரலாமா?’, ‘இங்கு எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது. பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சு கிட்டா போதும் எழுதப்பட்டது எழுதப்படும்’ என இந்த ட்ரெய்லரில் இடம் பெறும் டயலாக் எல்லாம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்று  ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.