பிரபல பாடகர் மரணம், 11 மொழிகளில் 3 ஆயிரம் பாடல்கள்.. அனைத்து தமிழ் பாட்டும் சூப்பர் ஹிட்!

பிரபல திரைப்பட பின்னணி பாடகரான கே.கேவின் மறைவு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் பாடகர் கேகே தமிழில் பாடிய சில பாடல்களின் தொகுப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியை சேர்ந்த கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கே.கே தமிழில் வெளியான மின்சாரகனவு திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ஸ்டிராபெரி கண்ணே பாடலை பாடி தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான, மன்மதன் திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் வளர்த்தேன் பாடல், சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாடல், கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற அப்படி போடு பாடல் உள்ளிட்ட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர்.

தமிழில் மட்டும் 60 க்கும் மேற்பட்ட பாடலில் பாடியுள்ள இவர், ஹிந்தி மற்றும் பிற 11 மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாடி உள்ளார் கேகே.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு செல்லும்போது கேகேவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

53 வயதேயான பாடகர் கே.கேவின் மறைவை பிரதமர் உள்பட பல அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →