ரஜினி, சத்யராஜ் மாதிரி இல்ல கமல்.. வளரும் நடிகருக்கு அப்பவே ஆண்டவர் கொடுத்த குரல் 

தக்லைஃப் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தமிழில் இருந்து பிரிந்து போனது தான் கர்நாடக மொழி, எல்லோரும் உறவுக்காரர்கள் என கூறினார் கமல். இதைப் பிடித்துக் கொண்ட அவர்கள் கர்நாடக மொழியை தப்பாக பேசி விட்டார் என போர்கொடி தூக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழ் திரை உலகம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அந்த விழாவில் நடிகர்கள் பலர் உணர்ச்சிமிக்க பேசினார்கள். குறிப்பாக சத்யராஜ் மற்றும் ரஜினி பேசியது  பூதாகர பிரச்சனையாக கிளம்பியது. 

பிரச்சனையை சமாளிக்க முடியாமல் ரஜினி ஒரு கட்டத்திற்கு மேல் மன்னிப்பு கேட்டு விட்டார். அதைப்போல்  சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தை அங்கே ஓட விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வழி இல்லாமல்  சத்தியராஜ் மன்னிப்பு கேட்டு விட்டார்.

 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் கன்னட நடிகர்  உபேந்திரா நடிப்பில் வெளிவந்த படம் H20. இந்த படத்தின் ஹீரோயினாக பிரியங்கா திருவேதி, காவேரி சதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ்நாட்டில் இருக்கும் பிரபுதேவாவும், கர்நாடகாவில் இருக்கும் உபேந்திராவும்  நடுவில் பார்டரில் இருக்கும் ஹீரோயின் காவேரியை காதலிப்பதாக அமைந்த கதை.

 இந்த படம் காவேரி நதிநீர் பிரச்சனையை சித்தரிப்பதாக   இருந்ததை ஒட்டி அங்கே எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்பொழுது பிரபுதேவாவுக்கு துணையாக தோள் கொடுத்து நின்றவர் கமலஹாசன். படத்தை படமாக பாருங்கள் இதில் உங்களுடைய உணர்வுகளை புகுத்தாதீர்கள் என கமல் சப்போர்ட் பண்ணினார். 

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →