மனிதர்களை வேட்டையாடும் குரங்குகள்.. வானர ராஜாக்களின் Kingdom of the Planet of the Apes ட்ரெய்லர்

Kingdom of the Planet of the Apes trailer: கண்ணுக்கு குளிர்ச்சியான விஷுவல் காட்சிகளோடு வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைக்கும். அப்படி வெளிவந்த படங்களின் வரிசையில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் ட்ரெய்லர்.

பரிணாம வளர்ச்சியை பற்றி கேள்விப்பட்டிருக்கியா என்ற வசனத்தோடு ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது. அந்த காலத்துல மனிதர்கள் பல விஷயங்கள் செய்றதுல திறமையானவங்களா இருந்திருக்காங்க. அவங்களால கழுகு போல பறக்க முடியும்.

கடல் கடந்து தொடர்புல இருக்க முடியும். ஆனா இப்போ இது நமக்கான நேரம். நாம கத்துக்க முடியும். குரங்கினத்தால முடியும். என்னால் முடியும். இது என்னோட ராஜ்ஜியம். நான் ஆளப்பிறந்தவன் எனக் கூறும் குரங்குகள் மனிதர்களை வேட்டையாடுகிறது.

அதைத்தொடர்ந்து ஹீரோயினை காப்பாற்ற ஒரு குரங்கு பாடுபடுவதும், அழிக்க குரங்கின அரசன் வெறிகொண்டு அலைவதுமாக ட்ரெய்லர் செல்கிறது. இதில் பின்னணி இசையும், மிரள வைக்கும் விஷுவல் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது.

மேலும் மனுஷங்களோடு சேர்ந்தீங்கனா ஒன்னும் இல்லாம ஆயிடுவீங்க. சேர்ந்தா ஒன்னும் இல்லாம பண்ணிடுவோம் போன்ற வசனங்களும் ஃபயராக இருக்கிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

வெஸ்ட் பால் இயக்கி இருக்கும் இப்படம் வரும் மே பத்தாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. தற்போது மிரள வைக்கும் இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் வெறித்தனமான சம்பவம் இருக்கு என ஆர்ப்பரித்து வருகின்றனர்.